விஜய் மல்லையாவின் உல்லாச படகு ஏலம்: பாக்கி பணத்தை பெற்றுக்கொள்ள வங்கிகளுக்கு லண்டன் நீதிமன்றம் உத்தரவு

Report Print Kabilan in பிரித்தானியா

தொழிலதிபர் விஜய் மல்லையாவின் உல்லாச படகு ஏலம் விடப்பட்டதைத் தொடர்ந்து, அதிலிருந்து கிடைக்கும் பணத்தை இந்திய வங்கிகள் பெற்றுக்கொள்ள லண்டன் நீதிமன்றம் உத்தரவிட்டது.

இந்திய தொழிலதிபர் விஜய் மல்லையா, சுமார் 9 ஆயிரம் கோடி கடனை இந்தியாவில் உள்ள வங்களில் பெற்றுக்கொண்டு திருப்பி செலுத்தாமல் லண்டனுக்கு தப்பிச் சென்று விட்டார்.

இதனால் அவர் மீது வழக்கு தொடரப்பட்டு, தற்போது லண்டன் நீதிமன்றத்தில் இதன் மீதான விசாரணை நடைபெற்று வருகிறது. இந்நிலையில் மால்டா தீவில், விஜய் மல்லையாவுக்கு சொந்தமான படகு ஒன்று கைப்பற்றப்பட்டது.

இந்த படகை, விஜய் மல்லையா தரவேண்டிய கடன், வழங்கப்படாத சம்பளம் போன்ற காரணங்களுக்காக விற்க முடிவு செய்யப்பட்டது. அதன்படி மால்டா நீதிமன்றத்தில் வெற்றிகரமாக ஏலம் விடப்பட்டது.

இதன்மூலம் கிடைக்கும் தொகையில் இருந்து, ஸ்டேப் பாங்க் ஆப் இந்தியா உட்பட அனைத்து இந்திய வங்கிகளும் தங்களுக்கு கிடைக்க வேண்டிய கடன் தொகையை பெற்றுக்கொள்ளலாம் என லண்டன் நீதிமன்றம் உத்தரவிட்டது.

இந்நிலையில், மல்லையா மீதான வழக்கு விசாரணை அடுத்த ஆண்டு மே மாதத்திற்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது.

மேலும் பிரித்தானியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Latest Offers