இங்கிலாந்து அணி வெற்றி பெற்ற மகிழ்ச்சியில் மயங்கிவிழுந்த பெண்: பலியான சோக சம்பவம்

Report Print Vijay Amburore in பிரித்தானியா

உலக்கோப்பை கால்பந்து போட்டியின் போது, இங்கிலாந்து அணி வெற்றி பெற்ற மகிழ்ச்சியில் தரையில் மயங்கி விழுந்த பெண் பரிதாபமாக பலியாகியுள்ள சம்பவம் நடந்துள்ளது.

இங்கிலாந்தை சேர்ந்த ரோசினா வார்பர்டன் (34) என்ற பெண் ஜூலை மாதம் 3ம் தேதி கொலம்பியா - இங்கிலாந்து அணிகளுக்கு இடையிலான உலகக்கோப்பை கால்பந்து போட்டியை தன்னுடைய வீட்டில் நண்பர்களுடன் சேர்ந்து பார்த்து கொண்டிருந்துள்ளார்.

ஆட்டத்தின் இறுதியில் இரு அணிகளும் 3-3 கோல்கள் அடித்து சமநிலையில் இருந்ததால், பெனால்டி வாய்ப்பை பெற்றனர்.

அதில் ஒரு கோல் அடித்து இங்கிலாந்து அணி காலிறுதி போட்டிக்கு தகுதி பெற்றது. இதனை ரோசினா, அவருடைய நண்பர்களுடன் சேர்ந்து மகிழ்ச்சியாக கொண்டாடி கொண்டிருந்துள்ளார்.

திடீரென அங்கு குழந்தை ஒன்று அழும் சத்தம் கேட்டுள்ளது. உடனே திரும்பி பார்த்த ராபர்ட் மோர்லி குழந்தையின் மீது ரோசினா விழுந்து கிடப்பதை பார்த்து அதிர்ச்சியடைந்து குழந்தையை வெளியில் எடுத்துள்ளார்.

பின்னர் ரோசினாவை எழுப்ப முயன்றபோது எந்த உணர்வும் இன்றி கிடந்துள்ளார். மேலும் அவருடைய உதடு ஊதா நிறத்தில் மாறியுள்ளது.

உடனே ஆம்புலன்சிற்கு தகவல் கொடுத்த மோர்லி, ரோசினாவிற்கு முதலுதவி கொடுக்க ஆரம்பித்தார். 7 நிமிடம் கழித்து வந்த ஆம்புலன்ஸ் ஊழியர்கள் ரோசினாவை மீட்டு மருத்துவமனைக்கு கொண்டு சென்று பரிசோதனை மேற்கொண்டனர்.

அதில் ரோசினாவிற்கு மூளைபகுதியில் ரத்த அழுத்தம் ஏற்பட்டிருப்பது தெரியவந்துள்ளது. தொடர்ந்து மருத்துவர்கள் சிகிச்சை அளித்தும் ரோசினா அடுத்த இரு நாட்களில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துவிட்டதாக மோர்லி வேதனை தெரிவித்துள்ளார்.

மேலும் பிரித்தானியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Latest Offers