பிரித்தானிய இளவரசர் ஹரியின் குழந்தை பிறக்கும் திகதி, பெயர் குறித்த உண்மைகளும் கணிப்புகளும்...

Report Print Balamanuvelan in பிரித்தானியா

பிரித்தானிய இளவரசர் ஹரியின் மனைவி மேகன் மெர்க்கல் கர்ப்பமாக இருக்கும் நிலையில், அவருக்கு எப்போது குழந்தை பிறக்கும், அது ஆணா அல்லது பெண்ணா, அதற்கு என்ன பெயர் வைக்கப்படும் என்பது குறித்த செய்திகள் மற்றும் கணிப்புகள் வெளியாகிக் கொண்டே இருக்கின்றன.

அந்த வகையில் சமீபத்தில் வெளியான ஒரு செய்தி, 2019ஆம் ஆண்டின் இளவேனிற்காலத்தில் மேகன் குழந்தையைப் பெற்றெடுப்பார் என்பது.

அக்டோபர் மாதம் 15ஆம் திகதி கென்சிங்டன் அரண்மனை வட்டாரம், இளவரசி கர்ப்பமாக இருக்கும் செய்தியை அதிகாரப்பூர்வமாக வெளியிட்டது.

அப்படியானால் மேகனுக்கு கர்ப்பமாக இருக்கும்போது 12ஆவது வாரத்தில் எடுக்கப்படும் ஸ்கேன் எடுக்கப்பட்டுவிட்டது.

ஆகவே மேகன் குறைந்தது நான்கு மாதங்கள் கர்ப்பமாக இருக்கவேண்டும், அப்படியானால், ஏப்ரல் மாத இறுதியில் அவர் குழந்தையை பிரசவிப்பார்.

மேகனின் கர்ப்பத்தில் இருப்பது என்ன குழந்தை என்பது இதுவரை ரகசியமாகவே உள்ளது என்றாலும், இளவரசர் ஹரி சிட்னியில் சுற்றுப்பயணம் செய்யும்போது, அவரது ரசிகர் ஒருவர், ஹரி உங்களுக்கு பிறக்கப்போவது பெண் குழந்தையாக இருக்கும் என நம்புகிறேன் என்று கூற, அவரும் நானும் அப்படித்தான் நம்புகிறேன் என்றார்.

அதுபோல், குழந்தைக்கு என்ன பெயர் வைக்கப் போகிறார்கள் என்பது குறித்து ஹரியோ மேகனோ இதுவரை எதுவும் தெரிவிக்கவில்லை.

இந்நிலையில் பிரித்தானியர்கள் வழக்கம்போல பிறக்கப்போகும் குட்டி, இளவரசர் அல்லது இளவரசியின் பெயரை இப்போதே கணிக்கத் தொடங்கி விட்டனர்.

அதிகம் பேர் கணித்துள்ள பெயர்கள், ஆலிஸ், ஆர்தர், பிலிப், விக்டோரியா மற்றும் டயானா.

இதுபோக ஜேம்ஸ், ஆல்பர்ட், எலிஸபெத், அலெக்ஸாண்ட்ரா அல்லது சார்லஸ் என்னும் பெயர்களும் கணிப்பில் இடம்பெற்றுள்ளன.

மேலும் பிரித்தானியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Latest Offers

loading...