கால்பந்து போட்டி பார்க்கும் போது சுருண்டு விழுந்து இறந்த இளம்பெண்: வெளியான அதிர்ச்சி காரணம்

Report Print Raju Raju in பிரித்தானியா

பிரித்தானியாவில் இளம்தாய் ஒருவர் குடும்பத்தாருடன் டிவியில் கால்பந்து போட்டி பார்த்து கொண்டிருந்த போது சுருண்டு விழுந்து இறந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

Rochdale நகரை சேர்ந்தவர் ரோசினா வேர்பர்டன் (34). இவர் கடந்த ஜூலை மாதம் தனது வீட்டில் உலககோப்பை கால்பந்து போட்டியை பார்த்து கொண்டிருந்தார்.

இங்கிலாந்து - கொலம்பியா இடையில் நடந்த போட்டியை மகிழ்ச்சியாக தனது குடும்பத்தார் மற்றும் நண்பர்களுடன் பார்த்து ரசித்து கொண்டிருந்தார்.

அப்போது திடீரென சுருண்டு அருகில் இருந்த உறவினர் குழந்தையின் மீது ரோசினா விழுந்துள்ளார்.

இதை பார்த்து அங்கிருந்தவர்கள் பதறி போய் அவசர உதவி எண்ணுக்கு போன் செய்தனர்.

இரவு நேரம் என்பதால் போன் நம்பர் பிசியாக சென்றுள்ளது.

பின்னர் ஒருவழியாக அங்கு ஆம்புலன்ஸ் வந்த நிலையில் மருத்துவ ஊழியர்கள் ரோசினாவை அழைத்து சென்றனர்.

ஆனால் மருத்துவர்களால் அவரின் உயிரை காப்பாற்ற முடியவில்லை.

இது குறித்து ரோசினாவின் உறவினர் கூறுகையில், ரோசினா கீழே சுருண்டு விழுந்ததை இன்னும் என்னால் மறக்க முடியவில்லை.

அந்த சமயத்தில் எல்லோரும் மது அருந்தியிருந்தோம்.

ஆனால் ரோசினாவின் மரணத்துக்கு மூளையில் ஏற்பட்ட பலமான ரத்தகசிவு தான் காரணம் என மருத்துவர்கள் தெரிவித்தனர்.

ஒரே நேரத்தில் மாரடைப்பும், மூளை ரத்த கசிவும் ஏற்பட்டதும் முக்கிய காரணம் என மருத்துவர்கள் எங்களிடம் கூறினார்கள்.

ரோசினாவின் இறப்பை இன்னும் எங்களால் தாங்க முடியவில்லை என சோகத்துடன் கூறியுள்ளார்.

மேலும் பிரித்தானியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Latest Offers