கதவுகளை பூட்டிக் கொள்ளுங்கள், பாம்பு ஒன்று தப்பி விட்டது: பிரித்தானியர்களுக்கு பொலிசார் எச்சரிக்கை

Report Print Balamanuvelan in பிரித்தானியா

பிரித்தானியாவின் Lincolnshire பகுதியில் 9 அடி நீள பாம்பு ஒன்று தப்பி விட்டதால், வீட்டின் கதவுகள் மற்றும் ஜன்னல்களை மூடி வைக்குமாறு பொலிசார் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.

Bostonஇலுள்ள வீடு ஒன்றிலிருந்து 9 அடி நீள Boa constrictor வகை பாம்பு ஒன்று தப்பி விட்டது.

John என்பவரின் செல்லப்பிராணியான அந்த பாம்பு திடீரென காணாமல் போனது. வீடு முழுவடும் தேடியும் அதைக் காணாததால் அவர் பொலிசாருக்கு தகவல் அளித்தார்.

அந்த பாம்பின் படம் ஒன்றை வெளியிட்டுள்ள பொலிசார் கதவுகளையும் ஜன்னல்களையும் மூடி வைக்குமாறு மக்களை அறிவுறுத்தியதோடு, வெதுவெதுப்பான எந்த இடத்திலும் அது பதுங்கிக் கொள்ளலாம் என்பதால், எச்சரிக்கையாக இருக்குமாறும், அந்த பாம்பைக் கண்டால் பொலிசாருக்கு தகவல் அளிக்குமாறும் மக்களைக் கேட்டுக் கொண்டுள்ளனர்.

Boa constrictor வகை பாம்பு விஷமற்றது என்றாலும், தனது இரையைக் கொத்தி பின், அதன் உடலைச் சுற்றி இறுக்கிக் கொன்று விழுங்கி விடும் குணமுடையது.

மனிதர்களுக்கு பெரிய அளவில் ஆபத்து இல்லை என்றாலும் ஆடு மற்றும் பன்றிகளையும் அவை தாக்குவதாக தெரிய வந்துள்ளதால், ஒரு வேளை சிறு குழந்தைகள் தாக்கப்படலாம் என்ற அச்சம் நிலவுகிறது.

மேலும் பிரித்தானியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Latest Offers

loading...