மெர்க்கல் கர்ப்பம் பற்றி முதன்முறையாக பேசிய கேட்: என்ன கூறினார் தெரியுமா?

Report Print Vijay Amburore in பிரித்தானியா

பிரித்தானியாவின் அரச குடும்பத்தில் அண்ணன் - தம்பிக்கு இடையே கருத்து வேறுபாடு ஏற்பட்டு இருவரும் பிரிந்து செல்ல உள்ளதாக பல்வேறு தகவல்கள் வெளியாகும் நிலையில், மெர்க்கலின் கர்ப்பம் குறித்து இளவரசி கேட் பேசியிருக்கிறார்.

பிரித்தானிய அரச குடும்பத்தில் இளவரசர்கள் வில்லியம் மற்றும் ஹரி குடும்பத்திற்கு இடையே கருத்து வேறுபாடு ஏற்பட்டுள்ளதாகவும், அதன் காரணமாகவே ஹரி தன்னுடைய மனைவியுடன் ஃபிரோமோர் ஹவுஸிற்கு செல்ல உள்ளதாக செய்திகள் வெளியாகி இருந்தது.

இந்த ஹவுஸ் கென்சிங்டன் அரண்மனைக்கு சுமார் 25 மைல்கள் தொலைவில் உள்ள விண்ட்ஸர் பகுதியில் உள்ளது.

தங்களுக்கு பிறக்க உள்ள குழந்தையை தங்க குடத்தில் வைத்து வளர்க்காமல், ஒரு சாதாரண ஒரு சிறுவனை போல வளர்க்க விருப்புவதாலே தம்பதியினர் அங்கு செல்ல உள்ளதாக மற்றொரு தகவலும் வெளியாகியிருந்தது.

இந்த நிலையில் இளவரசர் வில்லியமுடன் லெய்செஸ்டர் பல்கலைக் கழகத்தில் விஜயம் மேற்கொண்டுள்ள கேட், அங்கு கான வந்திருத்த பொதுமக்களை நேரில் சந்தித்து கலந்துரையாடினார்.

அப்பொழுது கையில் செல்போனுடன் ஒரு பெண், உங்களுடைய குழந்தைகள் எப்படி இருக்கின்றனர் என நலம் விசாரித்தார். அதற்கு பதிலளித்த கேட், நன்றி, அவர்கள் அனைவரும் நலமாக இருக்கின்றனர். வரவிருக்கும் கிறிஸ்துமஸ் நிகழ்ச்சிக்காக இப்பொழுதே ஆயத்தமாகிவிட்டனர்.

கடைசி மகன் லூயிஸ் நன்கு வளர்ந்துவிட்டான். பார்ப்பதற்கு 7 மாத சிறுவன் போலவே இல்லை என பதிலளித்துள்ளார்.

அதனை தொடர்ந்து மெர்க்கல் மற்றும் ஹரிக்கு குழந்தை பிறக்கப்போவதை பற்றி கேள்வி எழுப்பினார். மிகுந்த மகிழ்ச்சியுடன் அதற்கு பதிலளித்த கேட், குழந்தைகளை பெறுவதற்கு இது ஒரு விசேஷமான தருணம் என தெரிவித்தார்.

மேலும், ஜார்ஜ் மற்றும் சார்லட்டிற்கு ஒரு புதிய உறவு கிடைக்க உள்ளது. லூயிஸுக்கு இது மிகவும் சிறப்பானதாக இருக்கும் என கூறியுள்ளார்.

மேலும் பிரித்தானியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Latest Offers