கைகொடுக்க முயன்ற பிரித்தானிய இளவரசி கேட்: முத்தம் கொடுக்க முயன்ற நபர்

Report Print Vijay Amburore in பிரித்தானியா

லெய்செஸ்டர் பல்கலைக்கழகத்தில் மாணவர்களை சந்தித்த பொழுது பிரித்தானிய இளவரசி கேட்டிற்கு 6 வயது சிறுவன் முத்தம் கொடுக்க முயல்வதை பார்த்து, இளவரசியே முத்தத்திற்கு அனுமதி கொடுத்துள்ளார்.

பிரித்தானிய இளவரசர் வில்லியம் தன்னுடைய மனைவி கேட் மிடில்டன் உடன், ஹெலிகாப்டர் விபத்தில் உயிரிழந்த விச்சா ஸ்ரீதாதானபிரபஹாவின் கால்பந்து சங்கத்திற்கு சென்றனர்.

லெய்செஸ்டர் பல்கலைக்கழகத்தில் மாணவர்களின் பல்வேறு திட்டங்களை பற்றி கேட்டறிந்த தம்பதியினர், அதன் பின்னர் அக்டோபர் 27ம் தேதி ஹெலிகாப்டர் விபத்தில் பலியான 5 பேருக்கும் அஞ்சலி செலுத்தினர்.

இந்த நிழச்சியின் போது, அரச தம்பதிகளுக்கு இரட்டையர்கள் சாய் மற்றும் தாரான் கோர்கானி சேர்ந்து பூங்கொத்து கொடுத்து வரவேற்றனர்.

அதனை தொடர்ந்து கேட் இருவருக்கும் கை கொடுத்து பேச ஆரம்பித்தார். அப்போது சாய் மட்டும் இளவரசியின் கன்னத்தில் முத்தம் கொடுக்க முயன்றான். இதனை கண்டுகொண்ட கேட், உடனே சிறுவன் முத்தம் கொடுக்க அனுமதி கொடுத்துள்ளார்.

அதன் பிறகு சிறுவன் இளவரசியின் கன்னத்தில் முத்தமிட்டான். இதனை சிரித்துக்கொண்டே இளவரசர் வில்லியம் பார்த்து கொண்டிருந்தார்.

மேலும் பிரித்தானியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Latest Offers