மார்பக அறுவை சிகிச்சை செய்த தாய்க்கு நேர்ந்த சோகம்: அனாதையான 3 குழந்தைகள்

Report Print Vijay Amburore in பிரித்தானியா

அழகிற்காக மார்பக அறுவை சிகிச்சை செய்த பிரித்தானிய தாய், அடுத்த 17 நாட்களில் பரிதாபமாக பலியாகியுள்ளார்.

இங்கிலாந்தை சேர்ந்த லூயிஸ் ஹார்வி என்ற 36 வயது தாய், கவர்ச்சியாக இருக்க ஆசைப்பட்டு மார்பக அறுவை சிகிச்சைக்கு சென்றுள்ளார்.

நார்விச் பல்கலைக்கழக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட ஹார்விக்கு வெற்றிகரமாக அறுவை சிகிச்சை முடிந்து வீட்டிற்கு அனுப்பி வைக்கப்பட்டார்.

அடுத்த சில நாட்களில் அவருக்கு திடீரென மூச்சுத்திணறல் ஏற்பட்டு தரையில் மயங்கி விழுந்துள்ளார்.

உடனே மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்ட அவருக்கு பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது. அதில், அவருடைய நுரையீரலில் இருந்து தமனிக்கு செல்லும் ரத்தக்குழாய்களில் ரத்தம் கட்டியிருப்பதாக தெரிவித்தனர்.

மேலும் அறுவை சிகிசிச்சை செய்வது மிகவும் ஆபத்தானது எனவும் எச்சரித்துள்ளனர். இதனையடுத்து வீட்டிற்கு கொண்டு செல்லப்பட்ட ஹார்வி அறுவை சிகிச்சை முடிந்த 17 நாட்களில் வீட்டில் பரிதாபமாக இறந்து கிடந்தார்.

இந்த சம்பவத்தால் தாயை இழந்து ஆதரவற்றவர்களான கெய்லே-அன்னே (18), ஓவன் (11) மற்றும் ஜாக்சன் (6) ஆகிய மூன்று குழந்தைகளையும் அவருடைய நண்பர் மார்க் ஹட்சன் கவனித்து வருகிறார். பண உதவிக்காக தற்போது நண்பர்களின் உதவியை நாடியுள்ளார்.

மேலும் பிரித்தானியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Latest Offers

loading...