பிரித்தானிய இளவரசர்கள் ஹரி, வில்லியமிடையே பிளவு...மத்தியஸ்தம் செய்த இளவரசர் சார்லஸ்: வெளியான புதிய தகவல்

Report Print Balamanuvelan in பிரித்தானியா

பிரித்தானிய இளவரசர் ஹரி, தனக்கு நிச்சயம் செய்யப்பட்ட மேகனை, ராஜ குடும்பத்துக்குள் வரவேற்பதற்கு தனது அண்ணனான வில்லியம் போதுமான அளவு முயற்சி செய்யவில்லை என்று எண்ணியதே சகோதரர்கள் இருவருக்கும் இடையே பிளவு ஏற்படுவதற்கு காரணமாக அமைந்தது என்னும் தகவல் வெளியாகியுள்ளது.

எப்போதும் இணைந்தே எதையும் செய்யும் சகோதரர்கள் என்று அழைக்கப்படும் பிரித்தானிய இளவரசர்கள் ஹரிக்கும் வில்லியமுக்கும் இடையில் சிறிது காலத்திற்கு ஒரு சிறு உரசல் நிலவியதாக தகவல்கள் வெளியான நிலையில் அதற்கு பல்வேறு காரணங்களும் கூறப்பட்டன.

அதில் முக்கியமாக, தனது அமெரிக்க மனைவியாகிய மேகனை ராஜ குடும்பத்துக்குள் வரவேற்பதற்கு ஹரியின் அண்ணனான வில்லியம் போதுமான முயற்சி எடுக்கவில்லை என ஹரி எண்ணியதே பிரச்சினைக்கு முக்கியமான காரணம் என தற்போது அரண்மனை வட்டாரத்தைச் சேர்ந்த ஒருவர் கூறியுள்ளார்.

சகோதரர்களுக்கிடையேயான பிரச்சினை, அவர்களது தந்தையான இளவரசர் வில்லியம் தலையிட்ட பிறகே தீர்க்கப்பட்டதாகவும், அவரது முயற்சியின் பேரிலேயே வில்லியமும் கேட்டும், ஹரியையும் மேகனையும் சென்ற கிறிஸ்துமஸை கொண்டாட Norfolk இலுள்ள தங்கள் வீட்டுக்கு அழைத்ததாகவும் அந்த நபர் தெரிவித்தார்.

இதையடுத்தே ஹரியும் மேகனும் Norfolkஇலுள்ள Anmer Hallஇல் தங்கியதோடு, கிறிஸ்துமஸ் அன்று மகாராணியார் மற்றும் மற்ற ராஜ குடும்ப உறுப்பினர்களுடன் அருகிலுள்ள Sandringhamஇல் இணைந்து கொண்டதாகவும் தெரிகிறது.

இன்னொரு பக்கம், இதனால்தான் ஹரியும் மேகனும் Kensington மாளிகையிலிருந்து Frogmore Cottageக்கு இடம்பெயர இருப்பதாகவும் செய்திகள் வெளியாகியுள்ளன.

கடந்த சனிக்கிழமை, தங்கள் முதல் குழந்தையை இளவேனிற்காலத்தில் வரவேற்க இருப்பதையொட்டி, இளவரசர் ஹரியும் மேகனும் Windsorஇலுள்ள Frogmore Cottageக்கு இடம்பெயர உள்ளதாக Kensington அரண்மனை வட்டாரம் அறிவித்தது.

மேலும் பிரித்தானியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Latest Offers