பாதிக்கப்பட்ட அந்த பெண் நான்தான்: பாலியல் வன்முறைக்கு ஆளான பிரித்தானிய பெண்ணின் துணிச்சலான முடிவு

Report Print Balamanuvelan in பிரித்தானியா

பிரித்தானியாவின் Rotherhamஇல் 15 வயதாக இருக்கும்போது ஏமாற்றப்பட்டு பாலியல் துஷ்பிரயோகம் செய்யப்பட்டதன் விளைவாக குழந்தை ஒன்றுக்கு தாயாகிய பெண்ணுக்கு நன்மை செய்வதாக நினைத்து ஒரு சமூக ஆர்வலர் செய்த செயலால் பெரும் குழப்பம் ஏற்பட்டது.

ஆனால் இந்த பிரச்சினைக்கு காரணமாக அமைந்தது Rotherham Council என்பது தற்போது தெரியவந்துள்ளது.

சிறுமிகளை ஏமாற்றி பாலியல் ஆசைகளைத் தூண்டி அவர்களுடன் பாலுறவு கொள்ளும் ஒரு கூட்டம் பாகிஸ்தானியர்களில் ஒருவனான Arshid Hussain (40) என்பவனின் தகாத ஆசைக்கு இரையாகி அறியாத வயதில் கர்ப்பமுற்ற அந்த இளம்பெண் Sammy Woodhouse (33).

தனது மகனை வளர்ப்பதற்கு Sammy கஷ்டப்படுவதை அறிந்த Rotherham Council, அவனை அரசு காப்பகத்தில் சேர்த்துக் கொள்ள முடிவு செய்துள்ளது.

அதற்கு Sammyயும் சம்மதித்த நிலையில், அவரை மனோரீதியாகவும், பாலியல் ரீதியாகவும், உடல் ரீதியாகவும் துஷ்பிரயோகம் செய்த Arshidஐயும், அவன் பெயர் Sammyயின் மகனின் பிறப்புச் சான்றிதழில் இல்லாத நிலையிலும் Sammyக்கு தெரியாமலே வழக்கில் சேர்த்துள்ளது Rotherham Council.

எனவே சட்டப்படி Sammyயின் மகனை காப்பகத்தில் சேர்த்துக் கொள்வதற்குமுன் வழக்கில் சம்பந்தப்பட்ட அனைவருக்கும் தெரியப்படுத்த வேண்டும் என்ற விதியின்படி Arshidஐ அணுகிய Rotherham Council, தனது மகனை சந்திக்கும் உரிமையைப் பெற்றுத் தருவதாக அவனிடம் கூறியுள்ளது.

இச்செய்தி அறிந்து அதிர்ச்சியடைந்த Sammy, மீண்டும் தன்னை துஷ்பிரயோகம் செய்தவனை சந்திக்க வேண்டியதை எண்ணி அச்சத்துக்குள்ளானார்.

இதனால் இதுவரை மறைந்து வாழ்ந்து வந்த Sammy, தனது மகனை பாதுகாக்க வேண்டும் என முடிவெடுத்து, தற்போது வெளியே வந்து தான்தான் Arshidஆல் பாதிக்கப்பட்ட பெண் என்று வெளிப்படையாக கூறியதோடு, தான் பாதிக்கப்பட்ட பெண்களுக்காக போராட இருப்பதாக தெரிவித்துள்ளதுடன், தனக்கு ஆதரவளிக்குமாறு பொது மக்களுக்கும் வீடியோவில் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

Rotherham gang என்று அழைக்கப்படும் அந்த கூட்டம் இதுவரை 102 சிறுமிகளை வன்புணர்வு செய்ததாக கைது செய்யப்பட்டு காவலில் வைக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில் ஏராளமான பெண்கள் தாங்கள் எவ்வாறு தங்கள் இள வயதில் மனோரீதியாகவும், பாலியல் ரீதியாகவும், உடல் ரீதியாகவும் பாதிக்கப்பட்டோம் என நீதிபதியின் முன்பு சாட்சியமளித்ததையடுத்து, சகோதரர்களான Arshid(40) Bannaras (36) மற்றும் Basharat (39) ஆகிய மூன்று பேருக்கும் தண்டனை வழங்கி Sheffield Crown நீதிமன்றம் இன்று தீர்ப்பளித்துள்ளது.

அதன்படி, Arshidக்கு 35 ஆண்டுகளும், Basharatக்கு 25 ஆண்டுகளும், Bannarasக்கு 19 ஆண்டுகளும் சிறைத்தண்டனை வழங்கப்பட்டுள்ளது.

மேலும் பிரித்தானியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Latest Offers

loading...