சிறப்பாக இடம்பெற்ற உலகத் தமிழர் பூப்பந்தாட்ட பேரவை

Report Print Dias Dias in பிரித்தானியா

உலகத் தமிழர் பூப்பந்தாட்ட பேரவையின் இங்கிலாந்து நாட்டுக்கான கிளை கடந்த ஞாயிற்றுக்கிழமை Bromley நகரில் உத்தியோகபூர்வமாக அங்குரார்ப்பணம் செய்து வைக்கப்பட்டது.

இதன்போது உலகத் தமிழர் பேரவையின் ஸ்தாபகர் திரு கந்தையா சிங்கம், தலைவர் திரு தங்கராசா சிவஸ்ரீ, WTBFன் நிர்வாக உறுப்பினர் திரு நிரஞ்சன், திரு. சேனாதிராஜா தனஞ்செயன் ( WTBF Founding Time members) செல்வன் லக்சன் தேவராஜன் ( young coordinator UK -WTBF ) ஆகியோர் கலந்து கொண்டிருந்தார்கள்.

இந்த நிகழ்வின் போது இங்கிலாந்து நாட்டுக்கான கிளை அமைப்பின் நிர்வாக அங்கத்தவர்கள் தெரிவு செய்யப்பட்டார்கள் இந்த நிர்வாக கட்டமைப்பில் இடம் பெற்றவர்களின் விபரம் பின்வருமாறு:

  • தலைவர்: பாலா திருமாறன், செயலாளர்: திரு ஆறுமுகம் ரவீந்திரன்.
  • பொருளாளர்: திரு கஜந்தன் சுப்பிரமணியம்.
  • உப தலைவர்: திரு.சேனாதிராஜா தனஞ்செயன்.
  • உப செயலாளர்: திருமதி ஊர்மிளா அசோக்குமார்.
  • இளையோர் ஒருங்கிணைப்பாளர்கள்: செல்வன் லக்க்ஷன் தேவராஜன், செல்வன் விது கிருஷ்ணமூர்த்தி, மூத்தோர்.
  • ஒருங்கிணைப்பாளர்கள்: திரு அன்ரனி பெனடிக்ற் . திரு தேவராஜன், திரு கார்த்திக் அரசரட்ணம்.
  • நிர்வாக உறுப்பினர்கள்: திரு கந்தவேள் நவநீதன், திரு தர்மலிங்கம் கிருஷ்ணமூர்த்தி, திரு சபா மகேசன்

இந்த நிகழ்வின் போது ஸ்தாபகர் திரு கந்தையா சிங்கம் அவர்களாலும் தலைவர் சிவஸ்ரீ தங்கராஜா அவர்களாலும் உலகத் தமிழர் பூப்பந்தாட்ட பேரவையின் செயற்பாடுகள் பற்றியும் அதன் கிளைகளின் செயற்பாடுகள் பற்றியும் முக்கியமாக கிளைகளின் செயற்பாடு இங்கிலாந்து நாட்டில் எவ்வாறு அமைய வேண்டும் என்பது பற்றியும் தாயகத்தில் கிளைகளின் மூலம் செயற்படுத்தப்பட வேண்டிய திட்டங்கள் பற்றியும் விரிவாக விரிவாக எடுத்துரைத்தார்கள்.

இங்கிலாந்தில் இயங்கி வருகின்ற Badminton கழகங்களுடனும் மற்றும் BTBF அமைப்புடனும் மிக நெருக்கமான உறவுகளை பேணி எம்மவரின் Badminton துறை வளர்ச்சிக்கு இயன்றவரை ஒத்துழைப்பை வழங்குவதுடன் World Tamil Badminton Federation இன் உலக கிண்ணப் போட்டிகளில் இங்கிலாந்து நாட்டினை ஒரு குடையின் கீழ் ஒருங்கினைத்து இங்கிலாந்து நாட்டின் வெற்றிக்கு சிறப்பாக செயற்படவும் இக்கிளையமைப்பு அர்ப்பணிப்புடன் செயற்படும் எனவும் கிளையின் செயல்பாடுகளில் முக்கியமான விடயங்களாக சிறுவர்கள் மற்றும் பெண்களையும் இத் துறையில் ஊக்குவிப்ப தற்கான செயல்திட்டங்கள் செயல்படுத்தவும் தீர்மானிக்கப்பட்டது.

மேலும் முக்கியமாக தாயகம் நோக்கிய பங்களிப்பில் யாழ் மாவட்டத்தின் வளர்ச்சிக்கு வருடம் தோறும் ஓர் காத்திரமான பங்களிப்பை வழங்கவும் அனைவரும் ஒரு மனதாக ஏற்றுக் கொள்ளப்பட்டது.

மேலும் பிரித்தானியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Latest Offers

loading...