7 வயது மகளின் உதட்டில் முத்தம் கொடுத்து புகைப்படத்தை வெளியிட்டு சர்ச்சையில் சிக்கிய உலக பிரபலம்

Report Print Deepthi Deepthi in பிரித்தானியா

இங்கிலாந்து நாட்டை சேர்ந்த கால்பந்து வீரர் டேவிட் பெக்காம் தனது மகளின் உதட்டில் முத்தம் கொடுத்த புகைப்படத்தை இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்டு எதிர்மறையாக விமர்சனங்களுக்கு ஆளாகியுள்ளார்.

லண்டனில் ice-skating யின் போது தனது 7 வயது மகள் Harper - யின் உதட்டில் முத்தம் கொடுத்து அந்த புகைப்படத்தை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட்டு இயற்கையான புகைப்படம் என தெரிவித்திருந்தார்.

இந்த புகைப்படம் சமூகவலைதளங்களில் வைரலாகி, பல்வேறு எதிர்மறையான விமர்சனங்களுக்கு ஆளாகியுள்ளது.

7 வயது மகளின் உதட்டில் முத்தம் கொடுப்பது என்பது மிகவும் தவறானது என்ற கருத்தும், உதட்டில் முத்தம் கொடுக்க அச்சிறுமி ஒன்றும் உங்களது மனைவி கிடையாது மகள் ஆவார்.

உதட்டு முத்தம் மனைவிக்கு சொந்தமானது என விமர்சனம் செய்துள்ளார். ஆனால் இதனை டேவிட் பெக்கம் கண்டுகொள்ளவில்லை. ஏனெனில், கடந்த வருடமும் இதுபோன் ஒரு புகைப்படத்தை டேவிட் பெக்காம் பதிவிட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.

மேலும் பிரித்தானியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Latest Offers