ராணியை வியந்து பார்க்க வைத்த மேகன்: அப்படி என்ன காரணம் தெரியுமா?

Report Print Vijay Amburore in பிரித்தானியா

பிரித்தானிய இளவரசி மெர்க்கல் திருமணத்தன்று அணிந்திருந்த ஆடை பற்றி ராணி வியந்து பேசியதாக செய்திகள் வெளியாகியுள்ளன.

கடந்த 19ம் தேதியன்று உலகம் முழுவதிலும் உள்ள அரச குடும்பத்து ரசிகர்கள் மேகனை அரச உடையில் பார்ப்பதற்கு ஆவலாக காத்திருந்தனர்.

அன்றைய தினம் மெர்க்கல் அணிந்திருந்த திருமண ஆடையை, எந்த வடிவமைப்பாளர் வடிவமைத்திருப்பார் என பொதுமக்கள் பல மாதங்களாக ஊகித்து வந்தனர்.

மேலும் பல வெளிநாட்டு வடிவமைப்பு நிறுவனங்களுக்கும் அன்றைய தினம் மறக்க முடியாத ஒரு நாளாக அமைந்திருந்தது.

இளவரசி மெர்க்கல் அணிந்திருந்த ஆடையில், கழுத்து பகுதி மற்றும் நீளமாக வடிவமைக்கப்பட்டிருந்த கால் பகுதி ஆடை அவருக்கு மேலும் அழகு சேர்த்தது.

இந்த ஆடையினை கிவென்சி ஆடை நிறுவனத்தின் மூலம் கிளேர் வெயிட் கெல்லர் என்பவர் வடிவமைத்தார்.

இதில் மெர்க்கலை பார்த்த ராணி, விவாகரத்தான மேகன், மிகவும் அழகான வெள்ளை நிறத்திலான ஆடையினை அணிந்திருக்கிறார் என வியந்து கூறியதாக அரண்மனை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

பிரித்தானிய பாரம்பரியத்தின் படி, வெள்ளை திருமண ஆடை தூய்மையின் ஒரு சின்னமாக கருதப்படுகிறது மற்றும் ஒரு பெண் திருமணம் செய்து, உறவை முடித்துவிட்டால், அவர்கள் கன்னித்தன்மையை இழந்துவிட்டால் அதன்பிறகு வெண்மை ஆடையை அணியமாட்டார்கள்.

முன்னதாக மெர்க்கல் தன்னுடைய 7 வருடன் காதலன் ட்ரெவோர் ஏங்கல்சனை திருமணம் செய்துகொண்ட இரண்டு வருடங்களில் பிரிந்து விட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.

மேலும் பிரித்தானியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்