நோயாளிகளுக்கு விஷ ஊசி போட்ட பெண் மருத்துவமனை ஊழியர் கைது

Report Print Balamanuvelan in பிரித்தானியா

பிரித்தானியாவின் பிரபல மருத்துவமனை ஒன்றில் பக்கவாதத்தால் பாதிக்கப்பட்ட நோயாளிகளுக்கு விஷ ஊசி போட்டதாக சந்தேகத்தின் பேரில் பெண் மருத்துவமனை ஊழியர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

பிரித்தானியாவின் Blackpoolஇல் அமைந்துள்ள Victoria மருத்துவமனையில் இச்சம்பவம் நடைபெற்றுள்ளது.

கைது செய்யப்பட்ட அந்த நபர் மருத்துவரா, நர்ஸா என்னும் தகவல்களோ, அவரது பெயர் போன்ற அடையாளங்களோ வெளியிடப்படவில்லை.

கடந்த நான்கு ஆண்டுகளாக அந்த மருத்துவமனையில் பணியாற்றிய அந்த பெண் பக்க வாதத்தால் பாதிக்கப்பட்ட நோயாளிகளுக்கு விஷ ஊசி போட்டிருக்கிறார்.

கைது நடவடிக்கையை தொடர்ந்து அந்த பெண் மருத்துவமனையிலிருந்து நீக்கப்பட்டுள்ளார்.

சில நோயாளிகளின் உடல் நலம் மோசமடைந்ததைக் கவனித்த மருத்துவமனை நிர்வாகிகள் பொலிசாரை வரவழைத்ததையடுத்து இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. பொலிசார் தொடர்ந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

மேலும் பிரித்தானியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்