தேனிலவுக்கு மகளை அழைத்து சென்ற பெற்றோர்: திரும்பி வந்தபோது காத்திருந்த அதிர்ச்சி

Report Print Balamanuvelan in பிரித்தானியா

பிரித்தானியாவைச் சேர்ந்த ஒரு தம்பதி தேனிலவுக்குச் செல்லும்போது தங்கள் மகளையும் உடன் அழைத்துச் சென்றனர்.

திரும்பி வந்தபோது, தங்கள் மகளை பள்ளியிலிருந்து முன் அனுமதி பெறாமல் அழைத்துச் சென்றதற்காக அவர்களுக்கு 60 பவுண்டுகள் அபராதம் விதிக்கப்பட்டது. Janine மற்றும் Shane Scott என்னும் அந்த தம்பதி அதை எதிர்த்து நீதிமன்றம் செல்ல, அங்கு அவர்களுக்கு அதைவிட பெரிய அதிர்ச்சி காத்திருந்தது.

நீதிமன்றம் அவர்களுக்கு 2,500 பவுண்டுகள் அபராதம் விதித்ததோடு மூன்று மாதங்கள் சிறைத்தண்டனையும் விதித்தது.

இது வாழ்வில் ஒரு முறை மட்டுமே வரும் பயணம் என்று கூறும் Janine (28), பள்ளிக்கு விடுப்பு எடுக்காமல் இருப்பதை நானும் வரவேற்கிறேன் என்றாலும் இது எங்கள் தேனிலவு.

ஆகவே இதை ஒரு அசாதாரண நிகழ்வாக கருதி விடுப்பு அளிப்பார்கள் என்று நான் நினைத்தேன் என்கிறார்.

Shane (27) இது ஒரு அவமானம், எங்களுக்கு வழங்கப்பட்ட தண்டனை என்கிறார்.

பிரித்தானிய சட்டப்படி பெற்றோர் உடல் நலமில்லமல் இருந்தாலோ அல்லது முன் கூட்டியே தலைமை ஆசிரியையிடம் அனுமதி பெற்றிருந்தாலோ மட்டுமே பிள்ளைகள் விடுப்பு எடுக்கலாம்.

அவ்வாறு செய்யாவிட்டால் 60 பவுண்டுகள் தொடங்கி, 2,500 பவுண்டுகள் வரை அபராதமும் மூன்று மாதங்கள் சிறைத் தண்டனையும் வழங்கப்படும் என்பது குறிப்பிடத்தக்கது.

மேலும் பிரித்தானியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்