இரண்டு ஆண்களை திருமணம் செய்து கொண்டு ஒரே வீட்டில் வாழும் பெண்: மேலும் இரண்டு காதலர்கள் இருப்பதாக பெருமிதம்

Report Print Raju Raju in பிரித்தானியா

பிரித்தானியாவில் இரண்டு ஆண்களை திருமணம் செய்து கொண்டு ஒரே வீட்டில் வாழும் பெண் இதுதவிர தனக்கு இரண்டு ஆண் நண்பர்கள் இருப்பதாகவும் கூறியுள்ளார்.

மேரி கிரம்ப்டன் (45) என்ற பெண்ணுக்கு கடந்த 2013-ல் டிம் என்பவருடன் திருமணம் நடைபெற்றது. இந்நிலையில் ஜான் ஹுல்ஸ் என்ற நபரை மேரி காதலிக்க தொடங்கினார்.

இதையடுத்து அவரை சமீபத்தில் திருமணம் செய்து கொண்டார் மேரி.

இந்த திருமணத்துக்கு தனது முழு சம்மதத்தையும் மேரியின் முதல் கணவர் டிம் தெரிவித்தது தான் ஆச்சரியம்.

இதையடுத்து இரண்டு கணவர்களோடு ஒரே வீட்டில் மேரி வசித்து வருகிறார். இது தவிர இரண்டு ஆண் நண்பர்களும் மேரிக்கு உள்ளனர்.

அவர்கள் மேரியின் வீட்டருகில் உள்ள வீட்டில் வசித்து வருகிறார்கள்.

இது குறித்து மேரி கூறுகையில், என்ன தான் நான் இருவரை திருமணம் செய்து கொண்டாலும் டிம்மை திருமணம் செய்தது மட்டும் தான் சட்டப்படி செல்லும், ஜானை மணந்தது செல்லாது.

ஏனெனில் ஒரே நேரத்தில் இரண்டு பேரை திருமணம் செய்து கொண்டு வாழும் சட்டம் இந்த நாட்டில் இல்லை.

என் இரண்டு கணவர்கள் அணிவித்த மோதிரங்களையும் என் விரல்களில் அணிந்துள்ளேன்.

ஒருவர் ஒரே நேரத்தில் ஒன்றுக்கும் மேற்பட்ட நபர்களை திருமணம் செய்து கொள்ளலாம் என்ற சட்டம் வரவேண்டும் என நினைக்கிறேன்.

என் வாழ்க்கை மகிழ்ச்சியாக உள்ளது என கூறியுள்ளார்.

மேலும் பிரித்தானியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Latest Offers

loading...