லண்டன் துப்பாக்கி சூடு நடந்த இடம் அருகில் 4 பேருக்கு கத்தி குத்து

Report Print Vijay Amburore in பிரித்தானியா

லண்டனில் துப்பாக்கி சூடு நடைபெற்ற இடத்திற்கு அருகில் 4 பேர் கத்தியால் குத்தப்பட்ட நிலையில் மீட்கப்பட்டுள்ளனர்.

வடக்கு லண்டனின் எட்மன்டன் பகுதியில் 4 பேர் கத்தியால் குத்தப்பட்ட நிலையில் கிடப்பதாக பொலிஸாருக்கு தகவல் கிடைத்தது.

இதனையடுத்து சம்பவ இடத்திற்கு விரைந்த பொலிஸார் 4 பேரையும் மீட்டு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர் .

இதுகுறித்து பொலிஸார் கூறுகையில், சம்பவம் தொடர்பாக இதுவரை கைது நடவடிக்கை எதுவும் மேற்கொள்ளப்படவில்லை. விசாரணை தொடர்ந்து நடைபெற்று வருகிறது . விரைவில் பாதிக்கப்பட்டவர்களின் நிலை குறித்து அறிவிக்கப்படும் என தெரிவித்துள்ளனர்.

முன்னதாக சனிக்கிழமை மாலை 6 மணிக்கு, இதே பகுதியில் இருந்து சிறிது தூரத்தில் உள்ள கோர்டன் சாலை பகுதியில் நடைபெற்ற துப்பாக்கி சூட்டில் மூன்று பேர் காயமடைந்திருந்ததும், அதில் இரண்டு பேருக்கு துப்பாக்கி சூட்டு காயங்கள் ஏற்பட்டிருந்ததும் குறிப்பிடத்தக்கது.

மேலும் பிரித்தானியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்