பிரித்தானிய ராணிக்காக தன்னுடைய ஆடைகளின் பாணியை மாற்றி அமைக்கக்கோரி இளவரசி மெர்க்கல் கூறியுள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளன.
பிரித்தானிய இளவரசிங் மெர்க்கல் கடந்த மே மாதம் இளவரசர் ஹரியை திருமணம் செய்த போது அணிந்திருந்த ஆடையானது, மாகாராணிக்கு மிகவும் பிடித்ததாக இருந்துள்ளது.
அந்த ஆடையினை பார்த்து ராணியே ஆச்சர்யமடைந்துள்ளார்.
ஆனால் அதன் பின்னர் மெர்க்கல் அணிந்த ஆடைகள் அனைத்தும் அரச குடும்பத்திற்கான ஆடை கட்டுப்பாடுகளை மீறுவதை போலவே அமைந்தது. இதனால் ராணி ஆடை கட்டுப்பாடுகளில் சில திருத்தங்கள் செய்தார்.
அதன் பின்னரும் கூட இளவரசருடன், மெர்க்கல் கலந்து கொண்ட இசை நிகழ்ச்சியில் முழங்கால் தெரியும் அளவிற்கு ஆடை அணிந்து வந்திருந்தார். இது பலரையும் முகம் சுளிக்க வைக்கும் அளவிற்கு இருந்தது.
அதனை தொடந்து பல நிகழ்ச்சிகளிலும் மெர்க்கல் அரச குடும்ப கட்டுப்பாடுகளை மீறியே ஆடைகளை உடுத்தி வந்தார்.
இந்த நிலையில் மெர்க்கல், தனக்கு தைக்கப்படும் ஆடைகள் பாலிவுட் தரத்தை விட சிறிது குறைவாகவும், அதேசமயம் அரச குடும்ப தரத்தை போன்றும் இருக்க வேண்டும் என கென்சிங்டன் அரண்மனை நிர்வாக ஆடை வடிவமைப்பாளர்களிடம் கூறியுள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளன.