பிரித்தானிய பொலிஸாருக்கு சவால் விடுத்த இளைஞர்: அடுத்து நடந்த அதிரடி சம்பவம்

Report Print Vijay Amburore in பிரித்தானியா

முடிந்தால் என்னை பிடியுங்கள் என பிரித்தானிய பொலிஸாருக்கு சவால் விடுத்த குற்றவாளியின் சவாலை ஏற்று பொலிஸார் அதிரடி காட்டியுள்ளனர்.

பிரித்தானியாவை சேர்ந்த 19 வயதான அலெக்ஸ் மில்லார்ட் என்ற இளைஞர் வணிக வளாகம் ஒன்றில் திருட்டு சம்பவத்தில் ஈடுபட்டுள்ளார்.

கடந்த 13ம் தேதியன்று அவனுடைய புகைப்படத்தை பேஸ்புக்கில் பதிவிட்ட பொலிஸார் குற்றவாளியை எங்காவது பார்த்தால் உடனடியாக தகவல் கொடுக்குமாறு, கூறியுள்ளனர்.

அதற்கு கீழே பொதுமக்கள் பலரும் கருத்து பதிவிட்டு வந்தனர். அதில் அனைவர்க்கும் ஆச்சர்யத்தை ஏற்படுத்தும் வகையில் குற்றவாளி, "முடிந்தால் என்னை பிடியுங்கள்" என சிரித்தவரே ஒரு பதில் தெரிவித்திருந்தார். இதனை பார்த்த ஒரு சிலர், குற்றவாளிக்கு எவ்வளவு தைரியம் என திட்ட ஆரம்பித்தனர்.

இந்த நிலையில் பொலிஸார் அவர்களுடைய பேஸ்புக் பக்கத்தில், குற்றவாளியின் சவால் ஏற்றுக்கொள்ளப்பட்டது. மேலும் அது தற்போது அது நிறைவேற்றம் செய்யப்பட்டுள்ளது என தெரிவித்துள்ளனர்.

இதனை பார்த்த பொதுமக்கள் பலரும் பிரித்தானிய பொலிஸாரை வெகுவாக பாராட்டி வருகின்றனர்.

மேலும் பிரித்தானியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்