பிரித்தானியாவில் லாட்டரி அதிர்ஷ்டத்தால் கோடீஸ்வரர்களாக மாறிய நபர்கள் இப்படிபட்டவர்களா? அதிரவைக்கும் தகவல்கள்

Report Print Santhan in பிரித்தானியா

பிரித்தானியாவில் லாட்டரி மூலம் மில்லியனர்களாக ஆகிய நபர்கள் பல முறை சட்டங்களை மீறியுள்ளதாகவும், அதில் சிலர் வங்கியில் திருடியுள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.

மனிதனுக்கு ஒரு முறை தான் அதிர்ஷ்டம் அடிக்கும் என்பார்கள். அந்த வகையில் பிரித்தானியாவில் லாட்டரியின் அதிர்ஷ்டத்தால் பலர் மில்லியனர்களாக மாறினர்.

ஆனால் அந்த பணங்களை சிலர் சரியாக பயன்படுத்த தெரியாமல் பறிகொடுத்தும் நின்றுள்ளனர்.

ஒரு சிலர் அதை சரியாக பயன்படுத்தி தற்போது வரை நிம்மதியான வாழ்க்கை வாழ்ந்து வருகின்றனர். இந்நிலையில் பிரபல ஆங்கில ஊடகம் ஒன்று லாட்டரியின் அதிர்ஷ்டத்தால் மில்லியனர்களாக மாறிய நபர்கள், ஏதேனும் தவறு செய்து பொலிசாரிடம் சிக்கியுள்ளனரா? சிறைச்சாலைக்கு சென்றுள்ளனரா என்பது குறித்து செய்தி வெளியிட்டுள்ளது.

Jane Park

பிரித்தானியாவின் ஈடன்பர்க் பகுதியைச் சேர்ந்தவர் Jane Park. 23 வயதான இவர் தன்னுடைய 17 வயதில் ஒரு மில்லியன் பவுண்ட்( இலங்கை மதிப்பில் தற்போது 22,51,41,927 கோடி ரூபாய்) சொந்தக்காரியாக மாறினார்.

தற்போது ஒரு மணி நேரத்திற்கு 8 பவுண்ட் சம்பாதிக்கும் இவர், 2017-ஆம் ஆண்டு மார்ச் மாதம் அளவிற்கு அதிமாக மது அருந்தி, தன்னுடைய விலையுயர்ந்த BMW காரை ஓட்டிய குற்றத்திற்காக, இவரது ஓட்டுனர் உரிமம் 18 மாதங்களுக்கு தடை செய்யப்பட்டது.

இப்படி இவர் மூன்றுக்கும் மேற்பட்ட முறை செய்ததாலே இந்த தடை என கூறப்படுகிறது.

Nina Hughes

Nina Hughes டோவர் பகுதியைச் சேர்ந்தவரான இவர் 700,000 மில்லியன் பவுண்ட்(இலங்கை மதிப்பில் தற்போது 15,75,99,34,955 கோடி ரூபாய்) லாட்டரியில் வென்றுள்ளார். இந்நிலையில் பிபரவரி மாதம் இவர் மரத்தை திருடிய குற்றத்திற்காக 5 நாட்கள் சிறையில் அடைக்கப்பட்டார்.

அதே போன்று 2016-ஆம் ஆண்டு போதை பொருள் விவகாரம் தொடர்பாகவும், கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்.

ஆனால் இதை எல்லாம் அவர் தற்போது மறந்துள்ளதாகவும், இவரது குடும்பத்தினர் தான் தற்போது வரை அதை நினைத்து வருத்தப்படுவதாக கூறியுள்ளார்.

James Hayes

James Hayes இவருக்கு லாட்டரி மூலம் 13.6 மில்லியன் பவுண்ட்(இலங்கை மதிப்பில் தற்போது 3,66,98,13,425 ரூபாய்) விழுந்துள்ளது. அதை வைத்து புதிய வீடு, கார் என்று வாழ்ந்து வந்த இவர், 20 வருடங்களுக்கு பின்னர் வங்கியில் கொள்ளையடிக்கப்பட்ட சம்பவத்தில் சந்தேகிக்கப்பட்ட நபர் ஆவார்.

மேலும் பிரித்தானியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்