16 வயது சிறுமியுடன் ஓடிபோன 47 வயதான கணவன்: அதிர்ச்சியில் உறைந்த மனைவி

Report Print Raju Raju in பிரித்தானியா
524Shares

பிரித்தானியாவில் 16 வயது சிறுமியுடன் தனது கணவர் ஓடி போய் அவரையே திருமணம் செய்து கொண்டு விட்டதாக மனைவி கண்ணீர் மல்க தெரிவித்துள்ளார்.

ஆண்டி டெல்போர்ட் (47) என்பவர் தனது மனைவி சமந்தா மார்ஷல் (36) மற்றும் மூன்று பிள்ளைகளுடன் வசித்து வந்தார்.

இந்நிலையில் பெத் (16) என்ற சிறுமி ஆண்டி வீட்டில் அடிக்கடி தங்கி வந்தார். பெத்தின் பெற்றோர் வெளியில் செல்லும் சமயத்தில் ஆண்டியும், சமந்தாவும் பெத்தை கவனித்து வந்தனர்.

இந்நிலையில், ஆண்டிக்கும் சிறுமி பெத்துக்கும் காதல் ஏற்பட்டது. இதையடுத்து இருவரும் வீட்டை விட்டு ஓடிபோயுள்ளனர்.

இதனையறிந்த சமந்தா துடித்து போனார். பின்னர் மீண்டும் ஆண்டியும், பெத்தும் வீட்டுக்கு வந்த நிலையில் தாங்கள் இருவரும் வாழ்வதற்காக இந்த வீடு வேண்டும் என கூறியுள்ளனர்.

ஆனால் தன்னை நம்பி 3 பிள்ளைகள் இருப்பதால் வீட்டை விட்டு போக முடியாது என சமந்தா கூறிவிட்டார்.

இதையடுத்து இருவரும் வெளியில் சென்று வேறுவீட்டில் தங்கி கொண்டனர்.

இதன் பின்னர் கடந்த 2016-ல் ஆண்டியும் பெத்தும் திருமணம் செய்து கொண்டனர்.

தற்போது தம்பதிக்கு இரண்டு குழந்தைகள் உள்ளது.

இது குறித்து ஆண்டி கூறுகையில், எங்களின் திருமண வாழ்க்கை நன்றாக உள்ளது, வயது வித்தியாசம் குறித்து கவலையில்லை என கூறியுள்ளார்.

இது குறித்து சமந்தா கூறுகையில், ஆண்டிக்கும் பெத்துக்கும் தவறான தொடர்பு இருப்பதை என் மகன் மூலம் நான் கண்டுப்பிடித்தேன். ஆனால் இருவரும் அதை முதலில் மறுத்து பின்னர் எனக்கு துரோகம் செய்துவிட்டனர். நான் என் முன்னாள் கணவரான ஆண்டியை பற்றி நினைப்பதேயில்லை என கூறியுள்ளார்.

இதனிடையில் ஆண்டிக்கு ஏற்கனவே முதல் திருமணம் நடந்து பின்னர் இரண்டாவதாக சமந்தாவை மணந்ததும், அதன்பின்னர் மூன்றாவதாக பெத்தை மணந்ததும் தெரியவந்துள்ளது.

மேலும் பிரித்தானியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்