100 வயதில் 26 வயது இளையவரை காதலித்து மணம் முடித்த பெண்மணி: 30 வருடங்கள் திகட்டாத காதல்

Report Print Arbin Arbin in பிரித்தானியா
303Shares

பிரித்தானியாவில் உள்ள denbighshire பகுதியில் தன்னைவிட 26 வயது இளையவரான நபரை 30 ஆண்டுகள் காதலித்து 100 வயது மூதாட்டி ஒருவர் திருமணம் செய்து கொண்டுள்ளது பலரது கவனத்தையும் ஈர்த்து வருகிறது.

பிரித்தானியாவின் வெல்ஸ் கவுண்டியில் உள்ள denbighshire பகுதியிலேயே இந்த வியக்க வைக்கும் காதல் திருமணம் நடந்துள்ளது.

காதலுக்கு வயது ஒரு பிரச்னையே இல்லை என்பதை இந்த 100 வயது Norah Witkiss என்ற பெண்மணி நிரூபித்துள்ளார்.

திருமணம் செய்து கொள்ளாமல் 30 ஆண்டுகள் ஒன்றாக வாழ்ந்த பின்னரே நோரா மூதாட்டியும் 74 வயது மால்கம் யேட்ஸ் என்பவரும் திருமணம் செய்து கொண்டுள்ளனர்.

பாடசாலை ஒன்றில் சமையல் கலைஞராக பணியாற்றி வந்துள்ளார் நோரா. இதற்கு முன்னர் இரண்டு முறை திருமணம் செய்துகொண்டாலும், அவை நீண்ட நாட்கள் நீடிக்கவில்லை.

1980 ஆம் ஆண்டு பேருந்து ஓட்டுனரான மால்கம் யேட்ஸ் என்பவருடம் நோராவுக்கு பழக்கம் ஏற்பட்டுள்ளது.

அதன்பின்னர் இருவரும் பிரிக்க முடியாத அளவுக்கு நெருக்கமாகினர். இருப்பினும் இந்த 30 ஆண்டுகளில் ஒருமுறை கூட இருவரும் திருமணம் குறித்து விவாதிக்கவில்லை என்றே கூறப்படுகிறது.

ஆனால் இந்த ஆண்டு துவக்கத்தில் நோராவிடம் முதன் முறையாக திருமணம் தொடர்பில் பேசியுள்ளார் மால்கம்.

100-வது வயதில் திருமணம் செய்து கொள்ள சம்மதம் கிடைத்ததும் தங்கள் பிள்ளைகள் மற்றும் பேரக்குழந்தைகள் முன்னிலையில் திருமணம் செய்து கொண்டுள்ளனர்.

முறைப்படி நோராவை திருமணம் செய்து கொண்டுள்ளது மிகுந்த மகிழ்ச்சியை தருவதாகவும், வயதில் ஒரு இருபது குறைந்துள்ளதாக கருதுவதாகவும் மால்கம் தெரிவித்துள்ளார்.

மால்கம் இல்லாமல் தம்மால் தனியாக இயங்க முடியாது எனவும், அதனாலையே மால்கத்தின் விருப்பத்தை தாம் நிறைவேற்றியதாகவும் நோரா தெரிவித்துள்ளார்.

நோராவுக்கு இந்த ஆண்டு டிசம்பர் மாதம் 101 வயது என்பது குறிப்பிடத்தக்கது.

மேலும் பிரித்தானியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்