பிரித்தானியாவில் பிரெக்சிட்டிற்கு எதிர்ப்பு தெரிவித்து நான்கு அமைச்சர்கள் ராஜினாமா செய்த நிலையில், ஸ்டீபன் பார்க்லே அமைச்சராக தெரிவு செய்யப்பட்டுள்ளார்.
ஐரோப்பிய கூட்டமைப்பில் இருந்து பிரித்தானியா விலகும் விவகாரத்தில், பிரதமர் தெரசா மே சமர்பித்த உடன்படிக்கைக்கு அதிருப்தி தெரிவித்து ஒரே நாளில் நான்கு அமைச்சர்கள் பதவி விலகினர்.
இவர்களில் பிரெக்சிட் துறை அமைச்சர் Dominic Raab ராஜினாமா செய்தது, பிரதமர் தெரசா மேவுக்கு கடும் நெருக்கடியை ஏற்படுத்தியது. இதனைத் தொடர்ந்து, Dominic Raabயின் பதவிக்கு ஸ்டீபன் பார்க்லேவை தெரசா மே தெரிவு செய்துள்ளார்.
இந்நிலையில் பிரெக்சிட் அமைச்சராக ஸ்டீபன் பார்க்லே பதவி ஏற்பார் என தெரிகிறது. இவர் தற்போது சுகாதாரத்துறை அமைச்சராக உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
