அனைத்தையும் இழந்து அனாதையான இளம்பெண்: இன்ப அதிர்ச்சி கொடுத்த இளவரசர் ஹரி

Report Print Vijay Amburore in பிரித்தானியா

நியூசிலாந்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள பிரித்தானிய இளவரசர் ஹரி, வேலை கேட்டு வந்த இளம்பெண்ணுக்கு உடனடியாக வேலை வழங்கி இன்ப அதிர்ச்சி கொடுத்துள்ளார்.

பிஜி, டோங்கா அவுஸ்திரேலியா உள்ளிட்ட நாடுகளில் சுற்றுப்பயணம் மேற்கொண்ட பிரித்தானிய இளவரசர் ஹரி - மெர்க்கல் தம்பதியினர், தற்போது இறுதிக்கட்டமாக நியூசிலாந்தில் பயணம் மேற்கொண்டு பல பகுதிகளையும் பார்வையிட்டு வருகின்றனர்.

இந்த நிலையில் இளவரசர் ஹரி, தன்னுடைய கர்ப்பிணி மனைவியுடன் வெல்லிங்டன் நகரத்தில் உள்ள இளைஞர் மனநல நிகழ்ச்சி ஒன்றில் கலந்துகொண்டார்.

அங்கு ஒவ்வொரு மேஜையிலும் அமர்ந்திருந்த மாணவர்களுடன் தம்பதியினர் கலந்துரையாடினர்.

அப்பொழுது 19 வயதான லூசியா கென்னடி என்ற இளம்பெண், நான் இரண்டு வருடத்தில் என்னுடைய பல்கலைகழக படிப்பை, முடித்துவிட்டேன். தற்போது உங்களிடம் வேலை செய்ய ஆசைப்படுகிறேன் என ஹரியிடம் கேட்டுள்ளார். அதற்கு ஹரி உடனடியாக சம்மதம் தெரிவித்துள்ளார்.

இதனால் மகிழ்ச்சியின் உற்சாகத்தில் இருக்கும் லூசியா, கொண்டாடும் விதமாக தன்னுடைய பிளாட் நண்பர்களுக்கு இரவு விருந்து கொடுக்க உள்ளார்.

கிறிஸ்ட்சர்ச் பகுதியில் ஏற்பட்ட நிலநடுக்கத்தில், லூசியா தன்னுடைய பெற்றோர், நண்பர்கள் மற்றும் உறவினர்களை இழந்துவிட்டார். அப்பொழுது அவருக்கு வெறும் 12 வயது தான் என்பது குறிப்பிடத்தக்கது.

மேலும் பிரித்தானியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Latest Offers

loading...