அம்மாவாக போகும் மேகன் வேடிக்கை பார்க்க வந்த குழந்தைகளுக்கு கொடுத்த இன்ப அதிர்ச்சி

Report Print Balamanuvelan in பிரித்தானியா

அம்மாவாக போகும் மேகன் வேடிக்கை பார்க்க வந்த குழந்தைகளுக்கு கொடுத்த இன்ப அதிர்ச்சி

நியூசிலாந்தில் காபி ஷாப் ஒன்றில் நடந்த சிறு சந்திப்பு ஒன்றிற்கு பின் வெளியே வந்த பிரித்தானிய இளவரசர் ஹரியின் மனைவி மேகன்,அங்கிருந்த சிறுவர்களுக்கு எதிர்பாராத ஒரு இன்ப அதிர்ச்சியை அளித்தார்.

காபி ஷாப்பில், கர்ப்பமாக இருக்கும் மேகனுக்கு ஏற்ற வகையில் ஸ்னாக் ஐட்டங்கள் தயார் செய்யப்பட்டிருந்தன.

தனது கணவருடன் இணைந்து கூட்டம் ஒன்றில் பங்கேற்ற மேகன், கூட்டம் முடிந்து வெளியே வந்ததும் அங்கு அவரையும் ஹரியையும் வேடிக்கை பார்க்க சிறுவர்கள் காத்திருப்பதைக் கண்டார்.

அவர்ளைக் கண்டதும் அவரது தாய்மை உணர்வு என்ன சொன்னதோ தெரியாது, ஒரு கணம் அவர்களைப் பார்த்த அவர், மீண்டும் காபி ஷாப்புக்கு சென்றார்.

காபி ஷாப் ஊழியர் ஒருவரிடம் அவர் அந்த குழந்தைகளைக் காட்டி ஏதோ சொல்ல, அவரும் மகிழ்ச்சியாக தலையாட்டி விட்டு உள்ளே செல்கிறார்.

பின்னர் வெளியே வந்த அந்த ஊழியர் கேக்குகளை அந்த குழந்தைகளுக்கு கொடுத்துள்ளார்.

என்ன நடந்ததென்றால், காபி ஷாப் உள்ளே ஸ்னாக்ஸ் சாப்பிட்ட மேகன், அங்கு நிறைய உணவுப் பொருட்கள் மீதமானதைக் கவனித்திருக்கிறார்.

அந்த குழந்தைகளைப் பார்த்ததும் அந்த காபி ஷாப் ஊழியரை அழைத்து மீதமான கேக்குகளை அவர்களுக்கு கொடுக்க முடியுமா என கேட்டிருக்கிறார்.

அவரும் மகிழ்ச்சியுடன் சம்மதிக்க, குழந்தைகளுக்கு எதிர்பாராத ராஜ விருந்து.

இளவரச தம்பதிகளை பார்க்க முடியுமா என எண்ணி வந்த குழந்தைகள் ராஜ உபசாரமே கிடைக்க மகிழ்ச்சியில் திக்கு முக்காடிப்போனார்கள்.

எனக்கு கைகால்களெல்லாம் நடுங்கி விட்டது என்கிறாள் ஒரு குழந்தை.

ஏற்கனவே உலகம் சுற்றி பலரது உள்ளங்களை கொள்ளை கொண்டு வரும் ராஜ தம்பதி, இந்த குழந்தைகளையும் அன்பு மழையில் நனைத்து விட்டார்கள்.

மேலும் பிரித்தானியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Latest Offers