அரச தம்பதியை பார்த்ததும் கண்கலங்கி அழுத சிறுவன்: தேற்றிய கர்ப்பிணி மெர்க்கல்

Report Print Vijay Amburore in பிரித்தானியா

விரைவில் தாயாக உள்ள உள்ள பிரித்தானிய இளவரசி மெர்க்கல், தன்னை பார்த்ததும் கண்கலங்கி நின்ற சிறுவனை தேற்றும் புகைப்படம் இணையத்தில் வைரலாக பரவி வருகிறது.

பிரித்தானிய இளவரசர் ஹரி, தன்னுடைய கர்ப்பிணி மனைவி மெர்க்கலுடன் நியூசிலாந்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு பல்வேறு பகுதிகளையும் பார்வையிட்டு வருகிறார்.

இந்த நிலையில் தம்பதியினர் இருவரும், வெல்லிங்டன் பகுதியிலுள்ள பள்ளிக்கு சென்று அங்குள்ள மாணவர்களை சந்தித்து பேசினார்.

அப்போது வரிசையாக நின்று கொண்டிருந்த மாணவர்களில் இறுதியாக நின்ற 5 வயது சிறுவன் ஜோ திடீரென கண்களை தேய்த்து கொண்டிருந்தான். இதனை கவனித்த இளவரசி மெர்க்கல் ஜோவின் நெஞ்சில் கைவைத்து ஆறுதல் கூறியதோடு, அவனுடைய கைகளை பிடித்தும் பேச முயற்சி செய்தார்.

பின்னர் அங்கு வந்த ஹரியும் பேச முயற்சித்து பார்த்தார். ஆனால் சிறுவன், கூச்சத்துடன் கண்களை தேய்த்துக்கொண்டே இருந்தான்.

இதுகுறித்து பள்ளியின் தலைமையாசிரியர் கூறுகையில், அந்த சிறுவன் மிகவும் அழகாக, வெட்கத்துடன் இருக்கிறான் என மெர்க்கல் கூறினார். அவன் கைகளை இளவரசர் ஹரி குலுக்க முற்பட்டார். ஆனால் சிறுவன் வெக்கத்தில் கொடுக்க மறுப்பதாக அவரே தெரிவித்தார் என கூறியுள்ளார்.

மேலும் பிரித்தானியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Latest Offers