6 வயது சிறுமி கழிவறைக்கு செல்ல தடை: வெகுண்டெழுந்த தந்தை என்ன செய்தார் தெரியுமா?

Report Print Raju Raju in பிரித்தானியா

பிரித்தானியாவில் உள்ள கடையில் 6 வயது சிறுமி இலவசமாக கழிவறையை பயன்படுத்த தடை செய்யப்பட்ட விடயம் அவரது தந்தையை கோபத்தில் ஆழ்த்தியுள்ளது.

Gloucester நகரை சேர்ந்தவர் ரயன் ஜோன்ஸ். இவரது மகள் லேசி (6). இருவரும் நேற்று சாலையில் நடந்து சென்று கொண்டிருந்தனர்.

அப்போது சிறுமி லேசி தான் கழிவறைக்கு செல்ல வேண்டும் என தந்தையிடம் கூறினார்.

இதையடுத்து அங்கிருந்த சாண்ட்வெச் உணவகத்துக்கு இருவரும் சென்றனர். கடை உரிமையாளர் டேவிட்டிடம் லேசி கழிவறை செல்ல அனுமதிக்க ரயன் கேட்டார்.

ஆனால் இலவசமாக கழிவறையை பயன்படுத்த அனுமதிக்க முடியாது, இது வாடிக்கையாளர்களுக்கு மட்டும் தான் என டேவிட் கூறினார்.

இதனால் கோபமடைந்த ரயன் அவருடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டும் டேவிட் ஒப்பு கொள்ளவில்லை.


இதையடுத்து £2 பணம் கொடுத்து ரயன் காபி வாங்கிய நிலையில் சிறுமி லேசி கழிவறைக்குள் அனுமதிக்கப்பட்டார்.

இது குறித்து ரயன் கூறுகையில், டேவிட்டின் செயலை ஏற்க முடியாது, சிறுமி என்றும் பாராமல் இரக்கமற்ற முறையில் அவர் நடந்து கொண்டார்.

பணம் கொடுத்து அங்கு உணவு வாங்குவது பிரச்சனையில்லை. ஆனால் குழந்தைகள் விடயத்தில் இப்படி நடந்து கொண்டது தவறானது என கூறியுள்ளார்.

கடை உரிமையாளர் டேவிட் கூறுகையில், முன்னர் பொதுமக்களை இலவசமாக கழிவறைக்குள் அனுமதித்தேன். ஆனால் அதை முறைகேடாக அவர்கள் பயன்படுத்தினார்கள்.

அதன்பின்னர் எங்கள் வாடிக்கையாளர்களுக்கு மட்டுமே அனுமதி கொடுக்கிறோம் என விளக்கமளித்துள்ளார்.

மேலும் பிரித்தானியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Latest Offers