9 மணிநேரமாக காத்திருந்த குழந்தைகளுக்கு ஹரி - மெர்க்கல் கொடுத்த பரிசு

Report Print Vijay Amburore in பிரித்தானியா

நியூசிலாந்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள பிரித்தானிய அரச குடும்ப தம்பதியினரை காண 9 மணிநேரமாக காத்திருந்த சிறுமிகளுக்கு தம்பதியினர் ஆச்சர்ய பரிசு கொடுத்துள்ளனர்.

பிரித்தானிய இளவரசர் ஹரி தன்னுடைய கர்ப்பிணி மனைவி மெர்க்கலுடன் காமன்வெல்த் போட்டிகள் நடைபெற உள்ள நாடுகளில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு வருகிறார்.

அவுஸ்திரேலியாவில் நடந்து முடிந்த இன்விக்ட்ஸ் விளையாட்டு போட்டிகளை கண்டு மகிழ்ந்த தம்பதியினர், தற்போது சுற்றுப்பயணத்தின் இறுதிநாளை நியூசிலாந்தில் கழித்து வருகின்றனர்.

அங்கு பரபம்பரிய முறைப்படி வரவேற்பு கொடுக்கப்பட்ட பின்னர், வருகைககக காத்திருந்த பொதுமக்களை சந்திக்க சென்றனர். அப்போது ஜான் ரிச்சர்ட்சன் என்ற பெண் சத்தமாக ஹரியை அழைத்தார்.

சத்தம் கேட்டு திரும்பிய ஹரியிடம், நாங்கள் 9 மணிநேரமாக உங்களை காண காத்திருக்கிறோம் என கூறியதோடு, தன்னுடைய இரு மகள்களும் புகைப்படம் எடுத்துக்கொள்ள ஆசைப்படுவதாக கூறியுள்ளார்.

இதை கேட்ட ஹரி, உடனே புகைப்படம் எடுத்துக்கொள்ள அழைப்பு விடுத்தார். பின்னர் 10 வயதான Sophie Hubbard மற்றும் Hope Watson என்ற இரண்டு சிறுமிகளும் புகைப்படம் தம்பதிகளுடன் எடுத்துக்கொண்டனர்.

மேலும் பிரித்தானியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்