கர்ப்பிணி மெர்க்கலின் மூக்கின் மேல் மூக்கை உரசிய ஆண்: ஏன் தெரியுமா? வைரல் வீடியோ

Report Print Raju Raju in பிரித்தானியா

நியூசிலாந்துக்கு சுற்றுபயணம் மேற்கொண்டுள்ள பிரித்தானிய இளவரசர் ஹரி மற்றும் மெர்க்கலுக்கு பாரம்பரிய முறைப்படி அசத்தலான வரவேற்பு அளிக்கப்பட்டது.

16 நாள் சுற்றுபயணமாக ஹரியும், அவர் மனைவி மெர்க்கலும் அவுஸ்திரேலியா, நியுசிலாந்து, பிஜி போன்ற நாடுகளுக்கு சென்றுள்ளார்கள்.

இறுதி நாடாக நியுசிலாந்துக்கு இருவரும் வந்துள்ளார்கள்.

அங்கு இருவருக்கும் Maori பாரம்பரிய முறைப்படி வரவேற்பு அளிக்கப்பட்டது.

அதாவது Maori ஆணுடன் மெர்க்கல் மூக்கோடு மூக்கை உரசினார், அதே போல பெண்ணுடன் ஹரி மூக்கோடு மூக்கை உரசினார்.

இதோடு அங்கிருந்த நடன குழுவினர் பாரம்பரிய நடனம் ஆடியதோடு, பாடலையும் இருவர் முன்னாலும் பாடினார்கள்.

முன்னதாக விமான நிலையத்துக்கு வந்த நியுசிலாந்து பிரதமர் ஜெசிண்டா அர்டன் ஹரியையும், மெர்க்கலையும் வரவேற்றார்.

பின்னர் அரசாங்க விடுதிக்கு ஹரியும், மெர்க்கலும் சென்றனர்.

நியுசிலாந்தில் பெண்களுக்கு வாக்குரிமை வழங்கப்பட்டு 25 வது ஆண்டு நிறைவு விழா நடைபெற்று வரும் நிலையில் மெர்க்கல் சிறப்புரையாற்றினார்.

அவர் பேசுகையில், பெண்களுக்கு ஓட்டுரிமை வழங்க வேண்டும் என போராடிய பெண்கள் உலகளவில் பாராட்டப்பட்டார்கள்.

பெண்களின் வாக்குரிமை என்பது பெண்மையைப் பற்றியது. அது எப்போதும் நேர்மையாகவே இருக்கும் என பேசினார்.

மேலும் பிரித்தானியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Latest Offers