இவருக்கு உணவு வழங்காதீர்கள்! வாடிக்கையாளரின் 254 கிலோ உடல் எடையை குறைக்க வித்தியாசமான முயற்சியை மேற்கொண்ட பயிற்சியாளர்

Report Print Kabilan in பிரித்தானியா

பிரித்தானியாவில் தனது வாடிக்கையாளருக்கு உணவு வழங்க வேண்டாம் என உடற்பயிற்சியாளர் ஒருவர் மிடில்ஸ்ப்ரக் பகுதி முழுவதும் போஸ்டர்கள் ஒட்டியிருப்பது ஆச்சர்யத்தை ஏற்படுத்தியுள்ளது.

பிரித்தானியாவைச் சேர்ந்த வெற்றிகரமான உடற்பயிற்சியாளர் மைக் ஹிண்ட். இவர் தனது வாடிக்கையாளரை ஓராண்டுக்குள் பயிற்சியளித்து, உடலைக் கட்டுக்குள் கொண்டு வந்துவிடுவதில் வல்லவர்.

இதனால், பலரும் இவரிடம் பயிற்சி பெற்று உடல் எடையை குறைக்க விண்ணப்பிக்கும் நிலையில், மைக் சிலரை மட்டுமே தெரிவு செய்வதை வழக்கமாக கொண்டுள்ளார்.

இந்நிலையில், டிப்சி எனும் 27 வயது இளைஞர் ஒருவர், தனது 254 கிலோ உடல் எடையை குறைக்க மைக்கிடம் விண்ணப்பித்துள்ளார். உணவுக்கட்டுப்பாடு இல்லை என்றால் மரணத்தை சந்திக்க நேரிடும் என மருத்துவர்கள் எச்சரித்த நிலையிலேயே டிப்சி விண்ணப்பித்தார்.

இதனை ஒரு சவாலாக ஏற்றுக்கொண்ட மைக், முதற்கட்டமாக டிப்சிக்கு உணவுக்கட்டுப்பாட்டை மேற்கொள்ளும் நடவடிக்கையில் ஈடுபட்டார். அதற்காக, டிப்சியுடன் தான் எடுத்துக்கொண்ட புகைப்படத்தை போட்டு, டிப்சியை காப்பாற்றுங்கள். உடல் எடை இவரை கொன்றுவிடும்.

இவர் உணவு கேட்டால் கொடுக்காதீர்கள் என போஸ்டர்கள் தயார் செய்து நகர் முழுவதும் ஒட்டினார். டிப்சிக்கு பசி எடுத்தால் மைக்கின் ஆரோக்கியமான உணவகத்திற்கு சென்று, அவர் குறிப்பிடும் உணவுகளையும் அளவோடு சாப்பிட்டு கொள்ளலாம்.

இந்நிலையில் தனது பயிற்சி குறித்து மைக் கூறுகையில், ‘இந்த உணவு பொதுமக்களுக்கு கிடைக்காது. என்னிடம் பயிற்சி பெறுபவர்களுக்காகவே அவர்களின் உடல் நலத்திற்கு ஏற்ப, சிறப்பாக செய்யப்பட்டிருக்கிறது.

டிப்சி தினமும் 11 ஆயிரம் கலோரி உணவுகளை சாப்பிட்டுக்கொண்டிருந்தார். தற்போது 3,500 கலோரியாக இது குறைந்துவிட்டது. இதில் 2 ஆயிரம் கலோரியை உடற்பயிற்சி மூலம் எரித்து விடுகிறார். இவருக்கு ஏற்ற உடற்பயிற்சி சாதனங்களை தனியாக உருவாக்க வேண்டியிருந்தது.

உடற்பயிற்சி செய்யும்போது இதய துடிப்பை கவனித்துக்கொண்டே இருப்போம். டிப்சியின் முகத்தில் சிறிய மாற்றம் தெரிந்தாலும், பயிற்சியை நிறுத்தி ஓய்வு கொடுத்துவிடுவோம். என் வாழ்க்கையில் இவரது உடல் எடை குறைப்பு மிகவும் சவாலானது.

ஓராண்டுக்குள் டிப்சியின் உடலைக் குறைத்து, சிறந்த உடற்பயிற்சியாளர் என்று மீண்டும் நிரூபிப்பேன்’ என தெரிவித்துள்ளார். தனது 18 வயதில் தந்தையை இழந்த டிப்சி, அப்போது மன அழுத்தத்திற்கு சென்றதால் அதற்காக மருந்துகளை எடுத்து வந்தார்.

ஆனால், மாத்திரைகளால் பசி அடிக்கடி எடுக்க அதிக உணவுகளை சாப்பிட ஆரம்பித்து, 254 கிலோ வரை உடல் எடையை எட்டினார். இதனால் வேலை இல்லாமல், திருமணமும் செய்யாமல் இருக்கும் டிப்சி உடல் எடையை குறைத்த பின்னர் பிற விடயங்களை செய்ய முடியும் என்று காத்திருப்பதாக தெரிவித்துள்ளார்.

மேலும் பிரித்தானியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Latest Offers

loading...