வயிற்றில் குழந்தையுடன் சேர்த்து நிறைமாத கர்ப்பிணியை கொலை செய்த கணவன்

Report Print Vijay Amburore in பிரித்தானியா

பிரித்தானியாவில் குழந்தை பிறப்பதற்கு இரண்டு நாட்களுக்கு முன்னதாக கர்ப்பிணி மனைவியை முன்னாள் கணவன் கொலை செய்துள்ள கொடூர சம்பவம் நடந்துள்ளது.

பிரித்தானிய சாலையில் சென்றுகொண்டிருந்த லாரி ஓட்டுநர், நடுரோட்டில் பெண் ஒருவர் ரத்த வெள்ளத்தில் கிடப்பதை பார்த்து பொலிஸாருக்கு தகவல் கொடுத்துள்ளார்.

ஆரம்பத்தில் சாலை விபத்து என நினைத்த அவர், அருகில் சென்று பார்த்த போது நிறைமாத கர்ப்பிணி கொலை செய்யப்பட்டிருப்பது தெரியவந்தது.

இந்த சம்பவம் குறித்து சமீபத்தில் தொலைக்காட்சி ஒன்றில் கலந்து கொண்டு பேசிய கெவின் - சூ தம்பதியினர், எங்களுடைய மகள் Eystna Blummie அவருடைய கணவரை பிரிந்து தனியாக வாழ்ந்து வந்தார்.

இதனால் Eystna-வின் வயிற்றில் வளர்ந்து கொண்டிருந்த குழந்தை வேறு ஒருவருடையது என நினைத்துக்கொண்டு Vile Tony McLeron (24) பல முறை கொலை மிரட்டல் விடுத்தார்.

அவர் எங்களுடைய மகளுக்கு போன் செய்து, நான் உன்னை கொலை செய்ய போகிறேன். நீ நிச்சயமாக உனக்கு பிறக்க போகும் குழந்தையை பார்க்க போவதில்லை என கூறினான்.


இதனால் பயந்துபோன என்னுடைய மகள், கொலை செய்யப்படுவதற்கு இரண்டு மாதத்திற்கு முன்னதாக பொலிஸில் புகார் அவனை விடுவிப்பதாக அறிவித்தனர்.

இந்த நிலையில் தான் ஒருமுறை என்னுடைய மகளுக்கு போன் செய்து, நான் உனக்கு ஆச்சர்ய பரிசு ஒன்று வைத்திருக்கிறேன் என கூறியுள்ளார்.

அதை கேட்டு என்னுடைய மகளும் அங்கு சென்ற போது, வயிற்றில் இருந்த குழந்தையின் மீது ஏறி உதைத்துள்ளார். இதில் குழந்தை இறந்ததோடு, என்னுடைய மகளும் பரிதாபமாக இறந்துபோனார் என அவர்கள் வேதனை தெரிவித்துள்ளனர்.

மேலும் தங்களுடைய மகள் இறந்ததற்கு காரணம் பொலிஸாரின் அலட்சியம் தான் என குற்றம் சுமத்தியுள்ளனர்.

மேலும் பிரித்தானியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Latest Offers

loading...