அவுஸ்திரேலியாவில் தனியாக வலம் வந்த ஹரி: கர்ப்பிணி மெர்க்கலுக்கு உடல்நிலை குறைபாடு?

Report Print Vijay Amburore in பிரித்தானியா

அவுஸ்திரலேசியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள பிரித்தானியா இளவரசர் ஹரி, தனியாக இன்று நடைபெற்ற நிகழ்ச்சிகளில் பங்கேற்றுள்ள சம்பவம் அனைவருக்கும் பல குழப்பத்தை உண்டாக்கியுள்ளது.

பிரித்தானிய இளவரசர் ஹரி தன்னுடைய மனைவி மெர்க்கலுடன் அவுஸ்திரேலியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு பல்வேறு இடங்களை சுற்றிப்பார்த்து வருகிறார்.

இதுவரை நடந்து முடிந்த அனைத்து நிகழ்வுகளிலும் தம்பதியினர் ஒன்றாகவே சென்று கலந்துகொண்டனர்.

ஆனால் இன்று காலை ராணுவத்தில் கை, கால்களை இழந்தவர்களுக்காக நடந்த சைக்கிள் போட்டியில் ஹரி மட்டும் தனியாக கலந்து கொண்டு புகைப்படம் எடுத்துக்கொண்டார்.

உடன் அவருடைய மனைவி வராததால், அனைவருக்கும் பல குழப்பத்தை ஏற்படுத்தியுள்ளது. ஒரு சிலர் கர்ப்பமாக இருக்கும் மெர்க்கலுக்கு உடல்நிலை குறைபாடு ஏற்பட்டிருக்கலாம் என இணையதளங்களில் சந்தேகம் தெரிவித்து வருகின்றனர்.

இந்த நிலையில் மெர்க்கல் உடல்நிலை நன்றாக இருப்பதாகவும், அவருக்கு சிறிது ஓய்வு தேவைப்பட்டுள்ளதால் தான் அவர் பங்கேற்கவில்லை என அரண்மனை வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.

மேலும் பிரித்தானியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Latest Offers

loading...