காலியான மைதானத்தில் உரை நிகழ்த்திய இளவரசர் ஹரி! ரசித்து பார்த்த மேகன்... ஏன் தெரியுமா?

Report Print Vijay Amburore in பிரித்தானியா

ஊனமுற்ற வீரர்களுக்கான விளையாட்டு போட்டியின் துவக்க விழாவில் பேசுவதற்காக காலி மைதானத்தில் இளவரசர் ஹரியின் உரைக்கு உதவி செய்யும் மேகன் புகைப்படங்கள் இணையத்தில் வைரலாக பரவி வருகிறது.

பிரித்தானிய இளவரசர் ஹரி தன்னுடைய கர்ப்பிணி மனைவி மெர்க்கலுடன் அவுஸ்திரேலியாவில் சுற்றுபயணம் மேற்கொண்டுள்ளார். அங்கு பல்வேறு இடங்களையும் மனைவியுடன் சுற்றி பார்த்து வருகிறார்.

ராணுவ பணியின்போது கை, கால்களை இழந்தவர்களுக்கான விளையாட்டு போட்டிகளை இளவரசர் ஹரி தான், வருட வருடம் துவங்கி வைத்து நடத்தி வருகிறார்.

அந்த வகையில் விளையாட்டு போட்டியின் துவக்க விழாவில் பேசுவதற்காக ஹரி, புகப்பெற்ற சிட்னி ஓபரா ஹவுஸ் மைதானத்தில் பயிற்சி பெற்று கொண்டிருந்தார்.

அதனை அவருடைய மனைவி மெர்க்கல் கீழிருந்து கவனித்து, திருத்தங்களை செய்துகொண்டிருந்துள்ளார்.

அனைவருக்கும் தெரிந்த அளவில் மெர்க்கல் ஒரு பொது மேடை பேச்சாளர். பெண்களின் அரசியல் பங்கேற்பு மற்றும் தலைமைத்துவத்திற்கான ஐ.நா. மகளிர் வழக்கறிஞராக தனது முன்னாள் பாத்திரத்தில் பல முறை பேசியிருக்கிறார். அதனால் அவர் கணவரின் உரைக்கு உதவியிருக்கலாம் என கூறப்படுகிறது.

அத பின்னர் பல்வேறு நிகழ்ச்சிகளுடன் நடைபெற்ற விழா, வெப்பமண்டல புயல் காரணமாக ஒரு மணி நேரம் தாமதமாக துவங்கியது.

இதில் நிகழ்ச்சிகள் அனைத்தையும் இளவரசி மெர்க்கல் மகிழ்ச்சியுடன் கண்டுகளிக்கும் புகைப்படங்களும் வெளியாகியுள்ளன.

மேலும் பிரித்தானியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்