பிரித்தானியாவில் ஆரம்பமாகவிருக்கும் தமிழ் பேரவையின் தேர்தல்! ஒன்று திரளும் தமிழ் மக்கள்!

Report Print Dias Dias in பிரித்தானியா

பிரித்தானியா தமிழர் பேரவையின் 2018 - 2019க்குரிய உள்ளூர்கட்டமைப்புகளுக்கான தேர்தல் நடவடிக்கைகள்மேற்கொள்ளப்பட்டுள்ளன. தமிழ் மக்களுக்கான நீதிக்கும் நிரந்தரதீர்வுக்குமான மூலோபாயத்தினை வகுத்து 2006ல் இருந்துபிரித்தானியா தமிழர் பேரவை தமது அரசியல் நடவடிக்கைகளைமேற்கொண்டு வருகின்றனர்.

இதன் முக்கிய விடயமாக பலஉள்ளூர் கட்டமைப்புக்களை உருவாக்கி அப்பிரதேசங்களில் வாழும் தமிழ் மக்களையும் உள்வாங்கி ஜனநாயக ரீதியாக தமிழர்களின் அரசியல் போராட்டத்தினை புலம்பெயர் தேசத்தில்முன்னெடுத்து வருகின்றனர்.

கடந்தகாலங்களில் இலங்கைஅரசின் தமிழர்களுக்கெதிரான நடவடிக்கைகளில் பலதடுப்பரண்களை உருவாக்கி திருப்புமுனைகள் ஏற்படுவதற்கு பிரித்தானியா தமிழர் பேரவையின் தொடர்ச்சியான செயற்பாடுமுக்கிய காரணமாக அமைந்து வருகின்றது.

இதில் முக்கியமாக 1. “Unlock the Concentration Camps in Sri Lanka”, கொடூர தடுப்பு முகாம்களை திறந்து விடு 2. "Are they Alive?", அவர்கள் உயிரோடு உள்ளனரா? 3. "International Independent Investigation" சர்வதேச சுயாதீன விசாரணை 4. "Land Grab" நில ஆக்கிரமிப்பை நிறுத்து 5. “Stop GSP+”.

ஐரோப்பாவின் வரிச் சலுகை ஏற்றுமதியை நிறுத்து. 6. "Continuing Genocide with Impunity" தண்டனையின்றித்தொடரும் கட்டமைக்கப்பட்ட இன அழிப்பு போன்ற விழிப்புணர்வுபிரச்சார நடவடிக்கைகள் மற்றும் பல்வேறு அரசியல் ராஜதந்திரசெயல் திட்டங்கள் மூலம் இலங்கை அரசினை சர்வதேசநாடுகளின் தொடர்ச்சியான கண்காணிப்புக்குள் கொண்டுவந்தமை, தமிழர்களின் காணிகள் விடுவிக்கப்படுவதற்கானஅழுத்தத்தினை தமிழர்களுக்கான அனைத்துக்கட்சி பாராளுமன்றகுழு (APPG T) அளிக்கிறது.

ஐ.நா போன்ற அமைப்புக்களினூடாக மேற்கொண்டமை மற்றும் தமிழர் பிரதேசங்களில் புதிதாக நிர்மாணிக்கப்பட்டு வருகின்ற புத்த விகாரைகள் தொடர்பான தகவல்கள் திரட்டப்பட்டு இலங்கை அரசின் தொடர்ச்சியான கலாச்சார இனவழிப்பினை ஆவணப்படுத்தி ஐ.நா. வில் வெளியிட்டமை போன்ற பல செயற்பாடுகள் வெளிவந்துள்ளது.

மேலும் பிரித்தானியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Latest Offers