இளவரசர் ஹரி - மெர்க்கலை பல இடங்களில் பின்தொடரும் பெண்! யார் தெரியுமா?

Report Print Vijay Amburore in பிரித்தானியா

அவுஸ்திரேலியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள பிரித்தானிய இளவரசர் ஹரி மற்றும் அவருடைய மனைவி மெர்க்கலை பின்தொடரும் பெண் குறித்து பல்வேறு தகவல்களும் இணையத்தில் வெளியாகிய வண்ணம் உள்ளன.

பிரித்தானிய இளவரசர் ஹரி மற்றும் அவருடைய கர்ப்பிணி மனைவி மெர்க்கல் தற்போது அரச முறை பயணமாக அவுஸ்திரேலியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு பல்வேறு இடங்களை பார்வையிட்டு வருகின்றனர்.

காமன்வெல்த் போட்டிகள் நடைபெறவிருக்கும் பிஜி உள்ளிட்ட 16 நாடுகளில் 76 நிகழ்ச்சிகளில் இந்த தம்பதியினர் பங்கேற்க உள்ளனர்.

கடந்த சில மாதங்களாகவே பெண் ஒருவர் ஹரி மற்றும் மெர்க்கல் அருகிலேயே அனைத்து புகைப்படத்திலும் நின்று கொண்டிருக்கிறார். அவர் யார் என்பது குறித்து பல்வேறு தகவல்கள் இணையத்தில் வெளியாகி கொண்டிருந்தன.

இந்த நிலையில் அரச தம்பதியினருக்காக நியமிக்கப்பட்ட புதிய பெண் பாதுகாவலர் தான் அந்த புகைப்படத்தில் இருக்கும் பெண் என உள்ளூர் செய்தித்தாள்கள் தெரிவித்துள்ளன. ஆனால் ஒரு சில காரணங்களுக்காக அவருடைய பெயர் வெளியிடப்படவில்லை எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

கடந்த 30 வருடங்களாக இளவரசருக்கு பாதுகாவலராக இருந்து தற்போது ஓய்வு பெற்றுள்ள Sergeant Bill Renshaw-ன் இடத்தை நிரப்புவதற்காக நியமிக்கப்பட்டுள்ளார் எனவும் கூறப்பட்டுள்ளது.

மேலும் பிரித்தானியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்