இங்கிலாந்து சிறுமிகளை துஸ்பிரயோகம் செய்த 20 குற்றவாளிகளுக்கு நீதிமன்றம் விதித்த அதிரடி தண்டனை

Report Print Vijay Amburore in பிரித்தானியா

இங்கிலாந்தில் 12க்கும் மேற்பட்ட சிறுமிகளை துஸ்பிரயோகம் செய்த 20 பேர் கொண்ட குழுவிற்கு 221 ஆண்டுகள் சிறைத்தண்டனை விதித்து நீதிமன்றம் அதிரடி தீர்ப்பினை வழங்கியுள்ளது.

வடக்கு இங்கிலாந்தின் ஹடர்ஸ்பீல்டு பகுதியில் கடந்த 2007 முதல் 2011 வரை, 12க்கும் மேற்பட்ட சிறுமிகளை 20 பேர் கொண்ட கும்பல் துஸ்பிரயோகம் செய்துள்ளனர்.

வெறும் 11 முதல் 15 வயது மட்டுமே உடைய அந்த சிறுமிகளை மது குடிக்க வைத்து சீரழித்துள்ளனர். இதில் ஈடுபட்ட குற்றவாளிகள் 20 பேரையும் கடந்த 3 ஆண்டுகளில் அடுத்தடுத்து பொலிஸார் கைது செய்து சிறையில் அடைத்தனர்.

இதில் 22 வயதான குற்றவாளி அமர்சிங் தலிவாலுக்கு இந்த ஆண்டு ஆரம்பத்தில் 18 ஆண்டுகள் சிறைத்தண்டனை விதித்து தீப்பளிக்கப்பட்டது.

இந்த நிலையில் குற்றவாளிகள் மீது பதியப்பட்டிருந்த 120 வழக்குகளையும் விசாரித்த நீதிபதி ஜியோஃப்ரி மார்ஸன், ஒவ்வொரு குற்றவாளிக்கும் 5 முதல் 18 ஆண்டுகள் வரை என 221 ஆண்டுகள் சிறைத்தண்டனை விதித்துள்ளார்.

இதில் குற்றம்சாட்டப்பட்ட அனைவரும் ஆசியாவை பூர்விகமாக கொண்ட இங்கிலாந்தை சேர்ந்தவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

மேலும் பிரித்தானியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Latest Offers