சாத்தான் வழிபாட்டில் இருந்து தாயாரை காப்பாற்றிய பிரித்தானிய சிறுமி: நடந்த பகீர் சம்பவம்

Report Print Arbin Arbin in பிரித்தானியா

பிரித்தானியாவில் 6 வயது சிறுமி ஒருவர் தமது கொடூர தந்தையிடம் இருந்து சித்ரவதை அனுபவிக்கும் தாயாரை காப்பாற்றியுள்ளார்.

பாடசாலை ஆசிரியரிடம் தமது தந்தையின் செயற்பாடு குறித்து புகார் அளித்த சிறுமி, தமது தந்தை மிகவும் மோசமானவர் எனவும் தெரிவித்துள்ளார்.

இந்த விவகாரம் தொடர்பில் விசாரணை மேற்கொண்டுவரும் நீதிபதி, இதுவரையான தமது நீதித்துறை வாழ்க்கையில்,

இதுபோன்ற ஒரு கொடூரமான சாத்தான் வழிபாட்டு முறையை கேள்விபட்டதே இல்லை என குறிப்பிட்டுள்ளார்.

சிறுமியின் புகாரை கேட்டு அதிர்ச்சியடைந்த ஆசிரியர்கள் உடனடியாக பொலிசாருக்கு தகவல் தெரிவிக்கவும்,

அடுத்த சில மணி நேரத்தில் 34 வயது Scott Keegans என்பவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

இந்த விவகாரம் தொடர்பில் பேசிய 36 வயது ஜூடி, கடந்த 3 ஆண்டுகளாக தமது வாழ்க்கையானது மிகவும் கொடூரமாக சித்தரிக்கப்பட்ட ஒரு திகில் படத்துக்கு ஒப்பானதாக இருந்தது என்றார்.

மருத்துவமனையில் நான் அனுமதிக்கப்பட்டபோது, அங்குள்ள மருத்துவர்கள் அனைவரும் நான் ஏதோ மிக ஆபத்தான வாகன விபத்தில் சிக்கியுள்ளதாக கருதினர், மட்டுமல்ல அவர்கள் கண்கலங்கினர்.

ஆனால் இந்த காயங்கள் அனைத்தும் எனது கணவர் எனக்கு அளித்த பரிசு என நான் அவர்களிடம் விளக்கினேன் என்றார் ஜூடி.

அவரை தீவிரமாக பரிசோதித்த மருத்துவர்கள், நுரையீரல் மற்றும் உடல் உறுப்புகள் பல சேதமடைந்துள்ளதாக தெரிவித்துள்ளனர்.

மேலும் உடம்பில் 95 சதவிகிதம் இடங்களிலும் காயங்கள் இருந்தது. இதனால் தொடர்ந்து 5 நாட்கள் மருத்துவர்களின் தீவிர கண்காணிப்பில் இருக்க வேண்டிய நிலை ஏற்பட்டது.

கடந்த 2009 ஆம் ஆண்டு ஹாலோவீன் தினத்தின் Scott Keegans-ஐ திருமணம் செய்து கொண்ட ஜூடி,

கடந்த 3 ஆண்டுகளுக்கு முன்னர் வரை தமது கணவர் தம்மை பாசத்துடன் கவனித்து வந்ததாக தெரிவித்துள்ளார்.

அதன் பின்னர் அவரது நடவடிக்கைகள் அனைத்திலும் மாற்றம் ஏற்பட்டது எனவும், தினசரி நரகத்தில் குடியிருந்தது போன்ற நிலை ஏற்பட்டதாகவும் ஜூடி தெரிவித்துள்ளார்.

மேலும் பிரித்தானியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்