பிரித்தானிய இளம்பெண்ணை இரண்டு மாதங்களாக கடத்தி வைத்து துஷ்பிரயோகம் செய்த அவுஸ்திரேலியர்

Report Print Balamanuvelan in பிரித்தானியா

பிரித்தானிய இளம்பெண் ஒருவரை இரண்டு மாதங்களாக தனது கட்டுப்பாட்டில் வைத்து வன்புணர்வு செய்து கொடுமைப்படுத்திய ஒரு நபர் தற்செயலாக பொலிசாரிடம் சிக்கினார்.

அந்த பெண்ணுக்கு Marcus Martin (23) என்னும் அந்த நபருடன் நட்பு ஏற்பட்டது. பின்னர் இருவரும் சுமார் 1500 கிலோமீற்றர்கள் ஒன்ராகவே சுற்றினர்.

முதலில் நட்பாக பழகிய Marcus பின்னர் அந்தப் பெண்ணைக் கட்டுப் படுத்த ஆரம்பித்தார்.

ஆரம்பத்தில் அவர்கள் இருவரையும் கண்டிருந்த அந்தப் பெண்ணின் நண்பர்கள், அவள் Marcusஇடம் மந்திரத்தால் கட்டுண்டது போல காணப்பட்டதாக பின்னர் தெரிவித்துள்ளனர்.

அவளை Marcus அடித்து உதைத்ததோடு தொடர்ந்து பல முறை வன்புணர்வும் செய்திருக்கிறான்.

என்றாலும் அவனை விட்டு அந்தப் பெண் தப்பியோடவில்லை. ஒரு நாள் பெட்ரோல் போடுவதற்காக சென்ற அந்தப் பெண்ணைக் கண்ட பெட்ரோல் நிலைய பணியாளரான Beverley Page, அவளது தோற்றத்தைக் கண்டு அதிர்ச்சியுற்று அது குறித்து பொலிசாரிடம் தகவல் கொடுத்திருக்கிறார்.

பொலிசார் அந்த காரை தடுத்து நிறுத்தியபோது, காயம்பட்ட அந்தப் பெண்ணை மீட்டனர்.

அதே காரின் பின்பகுதியில் மறைந்திருந்த Marcusஐயும் கைது செய்துள்ள பொலிசார், அவன் மீது நான்கு வன்புணர்வு வழக்குகள், தாக்குதல் வழக்குகள் உட்பட பல வழக்குகளைப் பதிவு செய்து சிறையில் அடைத்துள்ளனர்.

மேலும் பிரித்தானியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்