இலங்கைக்கு சுற்றுலா வந்த தம்பதிக்கு நேர்ந்த சோகம்: மனைவி கண் எதிரில் உயிரிழந்த கணவன்

Report Print Raju Raju in பிரித்தானியா

இலங்கைக்கு பிரித்தானிய தம்பதி சுற்றுலா வந்த நிலையில், கடலில் மூழ்கி கணவர் உயிரிழந்தது சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

பிரித்தானியாவை சேர்ந்தவர் ஆண்டி கிரிட்செட் (49). இவர் மனைவி லெஸ்லே (53). தம்பதிகள் இலங்கைக்கு ஒரு வாரத்துக்கு முன்னர் சுற்றுலா வந்தனர்.

இந்நிலையில் அங்குள்ள பெண்டோடா கடற்கரையில் ஆண்டி குளித்து கொண்டிருந்தார். அப்போது வேகமாக வந்த கடல் அலையில் அவர் உள்ளே இழுந்து செல்லப்பட்டார்.

இதை அங்கிருந்த ஆண்டியின் மனைவி லெஸ்லே பார்த்து அதிர்ச்சியில் உறைந்தார். இதையடுத்து அங்கிருந்த ஆண்டியின் நண்பர் டாமி அவரை மீட்க முயற்சி செய்தும் முடியவில்லை.

பின்னர் அங்கிருந்தவர்கள் ஒருவழியாக ஆண்டியை காப்பாற்றி உடனடியாக மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர்.

ஆனால் அவர் இறந்துவிட்டதை மருத்துவர்கள் உறுதி செய்தனர்.

இது குறித்து லெஸ்லே கூறுகையில், நடந்தவற்றை நான் பார்த்தேன், கொடூரமாக இருந்தது.

இது ஒரு மோசமான சூழ்நிலையாக இருந்தது, கணவரை மருத்துவமனைக்கு கொண்டு சென்ற பின் நான் கதறி அழுதேன். அங்கிருந்த ஊழியர்கள் அழாமல் அமைதி காக்க சொன்னார்கள்.

எங்களுக்கு திருமணமாகி 23 ஆண்டுகள் ஆகிறது.

ஆண்டியின் 50-வது பிறந்தநாளை வரும் புத்தாண்டில் நியூயோர்கில் கொண்டாட இருந்த நிலையில் இப்படி நடந்துவிட்டது என சோகத்துடன் கூறியுள்ளார்.

வெளியுறவு மற்றும் காமன்வெல்த் அலுவலகத்தின் செய்தித் தொடர்பாளர் கூறுகையில், பிரித்தானியரின் இறப்பை தொடர்ந்து இலங்கையில் உள்ள அதிகாரிகளுடன் தொடர்பில் உள்ளோம்.

அதே போல் அவரது குடும்பத்தை ஆதரிக்கும் டூர் ஆபரேட்டர்களுடனும் தொடர்பில் இருக்கிறோம் என கூறியுள்ளார்.

மேலும் பிரித்தானியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்