பிரித்தானியாவில் இளைஞர் ஒருவர் பெண்கள் மீது நடத்திய கொடூர தாக்குதல்: நீதிமன்றம் அதிரடி

Report Print Arbin Arbin in பிரித்தானியா

பிரித்தானியாவின் நியூபோர்ட் நகரில் பெண்கள் இருவர் மீது காரை மோதவிட்டு கொலை முயற்சியில் ஈடுபட்ட இளைஞருக்கு நீதிமன்றம் தண்டனையை அறிவிக்க உள்ளது.

குறித்த கொடூர சம்பவத்தை அடுத்து கைது செய்யப்பட்ட 19 வயதேயான மெக்கலே காக்ஸ் மீதான குற்றச்சாட்டுகள் நிரூபிக்கப்பட்டுள்ளதாக நீதிமன்றம் தெரிவித்துள்ளது.

மேலும் இந்த விவகாரத்தில் காக்ஸ் கடுமையான தண்டனையை அனுபவிக்க நேரிடலாம் எனவும் நீதிமன்றம் எச்சரித்துள்ளது.

Severn Bridge பகுதியில் அதிக வேகத்தில் வாகனம் செலுத்தி விபத்தை ஏற்படுத்திய குற்றத்திற்காக காக்ஸ் ஏற்கெனவே தண்டிக்கப்பட்டவர் என்பதும் தெரியவந்துள்ளது.

கடந்த ஏப்ரல் 29 ஆம் திகதி நடந்த இச்சம்பவம் தொடர்பில் பொலிசார் வெளியிட்டுள்ள கண்காணிப்பு கமெரா காட்சிகளில்,

Courtyard இரவு விடுதி அருகே காக்ஸின் வாகனம் பொதுமக்களை குறிவைத்து நெருங்குவது பதிவாகியிருந்தது.

இதில் பெண்கள் இருவர் நிலை தடுமாறி சாலையில் சரிந்துள்ளனர். இருப்பினும் வானத்தை வேண்டும் என்றே அவர்கள் மீது மோதியுள்ளார் இளைஞர் காக்ஸ்.

இச்சம்பவத்தில் பெண்கள் இருவரும் படுகாயமடைந்துள்ளனர். தகவல் அறிந்து சம்பவப்பகுதிக்கு விரைந்து வந்த பொலிசாருக்கு, காக்ஸின் கார் பொதுமக்களால் நெருப்பு வைக்கப்பட்டுள்ளது தெரியவந்தது.

இந்த விவகாரத்தில் கைது செய்யப்பட்ட காக்ஸ், தமது வாகனத்தை ஆயுதமாக பயன்படுத்தி தாக்குதல் நடத்தியதாக நீதிமன்ற விசாரணையில் குறிப்பிட்டுள்ளனர்.

இந்த வழக்கின் விசாரணை முடிவுக்கு வந்துள்ள நிலையில், வெள்ளியன்று தண்டனை விபரங்களை நீதிமன்றம் அறிவிக்கும் என கூறப்படுகிறது.

மேலும் பிரித்தானியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்