பிரித்தானிய பெண்ணுக்கு மலேசியாவில் மரண தண்டனை?

Report Print Vijay Amburore in பிரித்தானியா

மலேசியாவில் கணவனை குத்தி கொலை செய்த பிரித்தானிய பெண் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்.

பிரித்தானியாவை சேர்ந்த ஜான் வில்லியம் ஜோன்ஸ் (62), தன்னுடைய 62 வயது மனைவி சமந்தாவுடன் மலேசியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு பொழுதை கழித்து வருகிறார்.

இன்று அதிகாலை 2.30 மணியளவில் ஜான் கொலை செய்யப்பட்டுள்ளதாக பக்கத்து வீட்டை சேர்ந்த ஒருவர் பொலிஸாருக்கு தகவல் கொடுத்துள்ளார்.

இதனையடுத்து சம்பவம் இடத்திற்கு வந்த பொலிஸார் சமந்தாவை கைது செய்து விசாரணை மேற்கொண்டனர். மேலும் கொலை செய்யப்பட்டு கிடந்த ஜான் உடலையும் மீட்டு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர்.

இந்த சம்பவம் குறித்து பொலிஸார் கூறுகையில், ஜானுக்கு, சமந்தாவிற்கும் இடையே கடுமையான வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. இதில் ஆத்திரமடைந்த சமந்தா சமையலறைக்கு சென்று நீளமான கத்தியால் கணவருடைய நெஞ்சு பகுதியில் குத்தி கொலை செய்துள்ளார். ரத்தத்துடன் 12 அங்குல கத்தி அவர்களுடைய படுக்க அறையில் கண்டுபிடிக்கப்பட்டது என கூறியுள்ளார்.

மலேசியாவை பொறுத்தவரை கணவனை கொன்ற மனைவியின் மீது குற்றம் உறுதி செய்யப்பட்டால் மரண தண்டனை விதிக்கப்படும். கொலை தண்டனையில் சிக்கினாலே அங்கு மரண தண்டனை தான் அளிக்கப்படும்.

ஆனால் சமீபத்தில் மலேசிய அரசாங்கம் மரண தண்டனையை ஒழித்து சட்டம் இயற்ற உள்ளதாக தெரிவித்திருந்தது. ஆனால் சட்டமியற்றுபவர்கள் இன்னும் அதனை ஏற்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

மேலும் பிரித்தானியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்