இளவரசர் ஹரி அணிந்திருக்கும் மோதிரத்திற்கு பின் இத்தனை ரகசியங்களா?

Report Print Vijay Amburore in பிரித்தானியா

அவுஸ்திரேலியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இளவரசர் ஹரி தன்னுடைய கையில் அணிந்திருக்கும் மோதிரம் குறித்து பல்வேறு பீதியை கிளப்பும் தகவல்களும் இணையத்தில் வைரலாக பரவி வருகின்றன.

பிரித்தனியா இளவரசர் ஹரி தன்னுடைய கர்ப்பிணி மனைவி மெர்க்கலுடன் அவுஸ்திரேலியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ளார்.

அங்கு பொதுமக்கள் மற்றும் பள்ளி மாணவர்களை சந்தித்து அவர்களுடன் தங்களுடைய பொழுதை கழித்து வருகின்றனர்.

இந்த நிலையில் ஹரி தன்னுடைய வலது கையில் அணிந்திருக்கும் மோதிரம் குறித்து பல்வேறு தகவல்களும் இணையத்தில் வைரலாக பரவி வருகின்றன.

ஒரு சிலர் அந்த மோதிரம் திருமணத்தின் போது அணியப்பட்ட மோதிரம் எனவும், தற்போது மனைவி கர்ப்பமாக இருப்பதால் அதன் நினைவாக அணிந்துள்ளார் என கூறிவருகின்றனர். மற்றும் சிலர், அந்த மோதிரம் மனைவியின் கர்பத்திற்காக அரண்மனையிலிருந்து அவருக்கு வந்த பரிசு எனவும் கூறிவருகின்றனர்.

இந்த நிலையில் மோதிரம் குறித்த உண்மை தகவல்கள் தற்போது வெளிவந்துள்ளன. அதில், இளவரசர் ஹாரி அணிந்திருப்பது 'ஹெரிடேஜ்' டிசைனில் செய்யப்பட்ட டைட்டானியம் மோதிரம் ஆகும். இதன் விலை £275 பவுண்டுகள் ஆகும். இதனை அணிவதன் மூலம் உடலின் வெப்பநிலை, இதய துடிப்பு மற்றும் இயக்கம் ஆகியவற்றின் தொடர்ச்சியான அளவீடுகளை எடுத்துக்கொண்டு, இரவில் நன்கு உறங்குவதற்கு உதவும் எனவும், தற்போது சுற்றுலா பயணத்தில் இளவரசர் இருப்பதால் ஓய்வெடுக்கும்போது நன்கு உறங்குவதற்காகவே அதனை அணிந்துகொண்டுள்ளார் எனவும் கூறப்பட்டுள்ளது

மேலும் பிரித்தானியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்