பிரித்தானியாவில் மீண்டும் கால் நடைகளைத் தாக்கும் நோய் கண்டுபிடிப்பு

Report Print Balamanuvelan in பிரித்தானியா

பிரித்தானியாவில் 1990களில் லட்சக்கணக்கான கால்நடைகள் கொல்லப்படுவதற்கு காரணமாக அமைந்த கால் நடை நோய் ஒன்று மீண்டும் தலைகாட்டியுள்ளது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

மேட் கவ் டிசீஸ் என்று அழைக்கப்படும் BSE (Bovine Spongiform Encephalopathy) என்னும் நோய் ஸ்காட்லாந்தின் Aberdeenshireஇலுள்ள பண்ணை ஒன்றில் கால்நடைகளைத் தாக்கியுள்ளது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக அந்த பண்ணையில் இருந்து தயாரிப்புகள் வெளியாவது தடை செய்யப்பட்டுள்ளது.

அத்துடன் எப்படி இந்த நோய் வந்தது என்பது தொடர்பான விசாரணை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

2015ஆம் ஆண்டு தென் வேல்ஸிலுள்ள Carmarthenshireஇலும் இந்த நோய் இருப்பது தெரிய வந்து அந்த பண்ணையிலுள்ள அனைத்து கால்நடைகளும் கொல்லப்பட்டது குறிப்பிடத்தக்கது.

நல்ல வேளையாக மற்ற பண்ணைகளுக்கு இந்நோய் பரவுவதற்குமுன் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

மேலும் பிரித்தானியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்