உங்களுக்கு பெண் குழந்தை பிறந்தால் டயானா என்று பெயரிடுங்கள்: ஹரிக்கு ஆலோசனை கூறும் பிரபலம்

Report Print Balamanuvelan in பிரித்தானியா

இளவரசர் ஹரிக்கும் மேகனுக்கும் பெண் குழந்தை பிறந்தால் அதற்கு இளவரசி டயானாவின் பெயரை வைக்க வேண்டும் என இளவரசி டயானாவுக்கு நெருக்கமான ஒருவர் தெரிவித்துள்ளார்.

இளவரசி டயானாவின் முன்னாள் பட்லரான Paul Burrell, ராஜ தம்பதிக்கு பெண் குழந்தை பிறந்தால் தைரியமாக அதற்கு டயானா என பெயரிடுமாறு ஹரியையும் மேகனையும் கேட்டுக் கொண்டுள்ளார்.

60 வயதான Paul Burrell, மகாராணிக்கும் இளவரசி டயானாவுக்கும் பட்லராக இருந்தவர். பல வருடங்களாக இளவரசி டயானா குறித்து பல கருத்துகளை தெரிவித்து வரும் Paul Burrell, குட்டி இளவரசி பிறந்தால், அவருக்கு டயானா என பெயரிட்டால், அது ஹரியின் தாயை பெருமைப் படுத்தும் விதமாக அமையும் என்றும் தெரிவித்துள்ளார்.

Paul Burrell தற்போது ராஜ குடும்பத்துடன் தொடர்பில் இல்லாததால், இந்த நேரத்தில், அவர்கள் பெற்றோராவதற்கு தனது வாழ்த்துகளை தெரிவித்துக் கொள்வதாகவும் கூறியுள்ளார்.

மேலும் பிரித்தானியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்