சுற்றுலாவில் ரத்தம் ரத்தமாக வாந்தி எடுத்த குழந்தைகள்: பதறிய பெற்றோர்

Report Print Vijay Amburore in பிரித்தானியா

கரீபியன் தீவில் அமைந்துள்ள டொமினிக்கன் குடியரசில் சுற்றுலா மேற்கொண்ட போது தங்களுடைய மூன்று குழந்தைகளும் ரத்த வாந்தி எடுத்ததாகவும், அதனை சுற்றுலா ஏற்பாட்டாளர்கள் கண்டுகொள்ளவில்லை எனவும் பிரித்தானிய தம்பதி குற்றம் சுமத்தியுள்ளனர்.

பிரித்தானியாவை சேர்ந்த Billie Baker (30) - Reiss Monksfield (30) தம்பதியினர் தங்களுடைய விடுமுறையை கழிப்பதற்காக மூன்று குழந்தைகளுடன் டொமினிக்கன் குடியரசிற்கு சுற்றுலா மேற்கொண்டனர்.

அங்கு இறங்கிய முதல் நாளிலே ஒரு ரிசார்ட்டில் தங்களது குழந்தைகளுடன் உணவு உண்டுள்ளனர். அப்போது திடீரென மூன்று குழந்தைகளும் ரத்த வாந்தி எடுக்க ஆரம்பித்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர்.

அங்கு அவர்களுக்கு அநீதி இழைக்கப்பட்டதாக தாயார் Billie கூறியுள்ளார். இது குறித்து அவர் கூறுகையில்,

நாங்கள் விடுமுறையை கழிக்க மிகவும் மகிழ்ச்சியுடன் அங்கு சென்றோம். ஆனால் அது மிகப்பெரும் துயராக சோகமாக முடிந்தது. நாங்கள் உணவு உண்டதும், எங்களுடைய குழந்தைகள் சியான்னா (5), ஹரீஸ் (9) மற்றும் (11)க்கு திடீரென உடல் வெப்பநிலை அதிகரித்தது. அடுத்தடுத்து மூவரும் ரத்த வாந்தி எடுக்க ஆரம்பித்தனர்.

உடனே நாங்கள் பதறிப்போய் மருத்துவமனைக்கு குழந்தைகளை எடுத்து சென்றோம். அங்கு மருத்துவர்கள் சரியாக கூட எங்களை கவனித்து கொள்ளவில்லை. ஒருநாள் மட்டுமே நன்கு கவனித்து கொண்டனர். அங்கிருந்து வெளியில் வரலாம் என்றாலும், ஆயுதமேந்திய காவலர்களால் நாங்கள் தடுத்து நிறுத்தப்பட்டோம். எங்களிடம் சம்மந்தப்பட்ட சுற்றுலா ஏற்பாட்டாளர்கள் கூட நேரிடையாக பேசவில்லை.

எங்களுடைய குழந்தைகள் மூன்று நாட்களாக எதுவும் சாப்பிடாமல் வாந்தி மட்டுமே எடுத்து கொண்டிருந்தனர். என்னுடைய மகளால் நடக்கவும், பேசவும் கூட முடியவில்லை.

அதன்பின்னர் வேறு வழியில்லாமல் நாங்கள் பிரிட்டிஷ் தூதரகத்தை தொடர்பு கொண்டோம். அதன்பிறகு எங்களுடைய மருத்துவ காப்பீட்டு நிறுவனம் மூலம் ஆம்புலன்ஸ் மூலம் நாங்கள் வேறு மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டோம். அங்கு எங்கள் குழந்தைகளுக்கு சால்மோனெல்லா தாக்கியிருப்பது கண்டறியப்பட்டது. எங்களுடைய விடுமுறை நரகத்தில் இருப்பதை போன்றே இருந்தது என வேதனை தெரிவித்துள்ளார்.

இந்த நிலையில் சுற்றுலா நிறுவனம் அளித்துள்ள விளக்க குறிப்பில், Billie-ன் குடும்பம் உடல்நிலை சரியில்லாமல் துயரப்பட்டதை நினைத்து நாங்கள் மிகவும் வருந்துகிறோம். நாங்கள் தற்போது விசாரணை மேற்கொண்டு வருகிறோம். விரைவில் எங்களுடைய வாடிக்கையாளர்களிடம் இதுகுறித்து பேச உள்ளோம்.நாங்கள் அனைத்து ஹோட்டல்களையும் தணிக்கை செய்தே எங்களுடைய வாடிக்கையாளர்களை அனுப்பி வைக்கிறோம் என விளக்கம் கொடுத்துள்ளனர்.

மேலும் பிரித்தானியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்