இன்னும் விளையாட்டுப் பிள்ளைதான் ஹரி: சிரிக்க வைக்கும் வீடியோ

Report Print Balamanuvelan in பிரித்தானியா

அவுஸ்திரேலியாவுக்கு சுற்றுப்பயணம் செய்துள்ள பிரித்தானிய இளவரசர் ஹரியும் அவரது காதல் மனைவி மேகனும் உள்ளங்களை கொள்ளை கொண்டு வருகின்றனர்.

அவர்களது சுற்றுப்பயணத்தின் ஒரு பகுதியாக, தொண்டு அமைப்பு ஒன்றின் பிரதிநிதியாகிய ஒரு பெண் உரையாற்றிக் கொண்டிருக்க, ஈக்கள் அவரை தொந்தரவு செய்து கொண்டிருந்தன.

பொதுவாகவே அவுஸ்திரேலியாவில் ஈக்கள் அதிகம் என்பதால் அங்குள்ள மக்கள் பேசும்போது ஈக்களை விரட்டுவதற்காக தங்கள் கையை முகத்துக்கு முன் ஆட்டிக் கொண்டே பேசுவார்கள்.

அதை வேடிக்கையாக அவுஸ்திரேலிய சல்யூட் என்று சொல்வார்கள். ஹரியின் முன் பேசிக்கொண்டிருந்த பெண்ணும் அதையே செய்ய, திடீரென ஹரி ஈக்களை விரட்டுவதுபோல கைகளை வேகமாக அந்தப் பெண் முகத்தின் முன் ஆட்டினார்.

அவ்வளவுதான், இள்வரசி மேகன் முதல் பார்த்துக் கொண்டிருந்த மக்கள் வரை ஹரியின் இந்தக் குறும்பைப் பார்த்து விழுந்து விழுந்து சிரிக்கத் தொடங்கி விட்டனர்.

அந்த வீடியோவும் சமூக ஊடகங்களில் வெளியாக, பார்த்தவர்கள் ஹரியின் வேடிக்கையை வைரலாக்கி விட்டார்கள்.

ராஜ விசிறிகள், இதுதான் ஹரி, எப்போதுமே அவர் அவராகவே இருப்பார் என்று தொடங்கி, இந்த வீடியோவுக்கு நீங்கள் சிரிக்காவிட்டால் வேறு எதற்குமே சிரிக்க மாட்டீர்கள் என்பது வரை ட்வீட் மழை பொழியத் தொடங்கி விட்டனர்.

உண்மையாகவே அந்த வீடியோவைப் பார்த்தால் சிர்ரிக்காமல் இருக்க முடியவில்லை என்பது வீடியோவைப் பார்த்தால்தான் புரியும்.

மேலும் பிரித்தானியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்