தோழியை ரயிலில் வைத்து 87 முறை கத்தியால் குத்திய பெண்: தெறித்து ஓடிய பயணிகள்

Report Print Vijay Amburore in பிரித்தானியா

பிரித்தானியாவில் தாயை சந்திக்க மறுப்பு தெரிவித்த தோழியை பெண் ஒருவர் 87 முறை சரமாரியாக கத்தியால் குத்தி கொலை செய்துள்ள சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

பிரித்தானியாவை சேர்ந்த 42 வயதான Lisa Savage கடந்த ஏப்ரல் 15ம் தேதி தன்னுடைய 20 வருட தோழி Sarah Hayton உடன் ரயிலில் பயணம் செய்துள்ளார்.

சேவிஸ்டோ ரயில் நிலையத்தை நெருங்கும்போது, தன்னுடைய பையில் மறைத்து வைத்திருந்த கத்தியை கொண்டு Lisa, தன்னுடைய தோழி Sarah-வை தொடர்ந்து 4 நிமிடங்கள் சரமாரியாக கத்தியால் குத்தியுள்ளார்.

இதில் பலத்த காயமடைந்த Sarah, அதிக ரத்தம் வெளியேறிய நிலையில் மயங்கி விழுந்தார். உடனே அவர் இறந்துவிட்டார் என நினைத்த Lisa, நல்லபடியாக உறங்கு என கூறிவிட்டு கதவை திறந்து வெளியில் சென்றுள்ளார்.

இதனை பார்த்து அதிர்ச்சியடைந்த பயணிகள் அனைவரும் தங்களை காத்துக்கொள்வதற்காகா ரயிலில் ஓரத்தில் பதுங்கி கொண்டனர். அதேசமயம் சிசிடிவியின் மூலம் சம்பவத்தை பார்த்த அதிகாரி உடனடியாக பொலிஸாருக்கு தகவல் கொடுத்தார்.

பின்னர் இதுகுறித்து விசாரணை மேற்கொண்ட பொலிஸார் அப்பகுதியில் உள்ள பூங்கா ஒன்றில் வைத்து குற்றவாளி Lisa-வை கைது செய்தனர்.

இந்த பலத்த காயமடைந்த Sarah-விற்கு 67 மேலோட்டமான தையல் மற்றும் 20 ஆழமான தையல் போடப்பட்டிருப்பதாக நீதிமன்றத்தில் தெரிவிக்கப்பட்டது.

இந்த சம்பவம் குறித்து Sarah கூறுகையில், Lisa அவருடைய அம்மாவை சந்திக்க என்னை அழைத்தார். ஆனால் நான் அதற்கு மறுப்பு தெரிவித்தேன். அதனால் தான் ஆத்திரமடைந்து என்னை கத்தியால் குத்தினார் என தெரிவித்துள்ளார்.

இந்த நிலையில் வழக்கினை விசாரித்த நீதிபதி, குற்றவாளிக்கு 8 ஆண்டுகள் 4 மாதங்கள் சிறைத்தண்டனை விதித்து தீர்ப்பளித்தார்.

முன்னதாக Lisa தன்னுடைய காதலனை கொலை செய்த வழக்கில் 17 ஆண்டுகள் சிறைத்தண்டனை பெற்று விடுதலையானவர் என்பது குறிப்பிடத்தக்கது.

மேலும் பிரித்தானியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்