கொட்டும் மழையில் கணவருக்கு குடை பிடித்து ரசித்த இளவரசி மெர்க்கல்

Report Print Deepthi Deepthi in பிரித்தானியா

அவுஸ்திரேலியாவுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இளவரசர் ஹரி தம்பதியினர் சிட்னியில் உள்ள தாரங்கா உயிரியல் பூங்காவுக்கு சென்றுள்ளனர்.

பூங்காவில் ரூபி என்ற அவுஸ்திரேலிய விலங்கான கோலாவையும் , மேகன் என பெயரிடப்பட்டுள்ள அதன் குழந்தையையும் பார்த்து ரசித்துள்ளனர்.

அதன்பின்னர், அவுஸ்திரேலியாவில் மக்கள் தொகை அதிகம் கொண்ட Dubbo நகருக்கு சென்றுள்ளனர். அங்கு பல்வேறு நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டது.

ஆனால், இடையில் மழை குறுக்கிட்டது. நிகழ்ச்சியின் போது மழை குறுக்கிட்டதால் இளவரசர் ஹரி சிறு உரையை நிகழ்த்தினார். அப்போது மெர்க்கல் தனது காதல் கணவர் ஹரிக்கு, குடை பிடித்தவாரே அவரை ரசித்து பார்த்துக்கொண்டிருந்தார்.

Dubbo நபரை புகழ்ந்து பேசிய இளவரசர் ஹரி, தனக்கு குடை பிடிக்க மனைவி வந்ததால், நான் எனது மனைவியை பெற்றுக்கொண்டேன் என நகைச்சுவையாக கூறினார். மேலும், மழையும் நமக்கு ஒரு பரிசு என கூறினார்.

இந்த நகரில் இருந்து நூற்றுக்கணக்கானோர் அரச குடும்ப தம்பதியினரை பார்க்க ஏற்பாடு செய்யப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.

மேலும் பிரித்தானியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்