பிரித்தானியா இளவரசி மெர்க்கல்- யூஜின் திருமண புகைப்படத்தில் இருக்கும் வித்தியாசங்கள்!

Report Print Santhan in பிரித்தானியா

பிரித்தானியா இளவரசர் ஹரி அமெரிக்க நடிகையான மெர்க்கலை காதலித்து கடந்த மே மாதம் திருமணம் செய்து கொண்டார். இவர்களின் திருமணம் மிகவும் கோலாகலமாக நடைபெற்றது.

இதைத் தொடர்ந்து கடந்த சில தினங்களுக்கு முன்னர் அரசகுடும்பத்தில் எலிசெபத்தின் பேத்தியான யூஜின் திருமணம் பிரம்மாண்டமாக நடைபெற்றது.

யூஜின் அமெரிக்காவில் வெயிட்டராக பணியாற்றி வந்த ஜாக் புரூக்ஸ்பேங் என்பவரை காதலித்து திருமணம் செய்து கொண்டார்.

அரசகுடும்பத்தில் திருமணத்திற்கு பின்னர் மாளிகையில் எப்போதும் புகைப்படம் எடுத்துக் கொள்வது வழக்கம். அந்த வகையில் மெர்க்கல் திருமணத்தின் போது எடுக்கப்பட்ட புகைப்படமும், யூஜின் திருமணத்தின் போது எடுக்கப்பட்ட புகைப்படமும் அதில் இருந்த வித்தியாசம் குறித்து பிரபல ஆங்கில நாளிதழ் செய்தி வெளியிட்டுள்ளது.

உடல் மொழி நிபுணர் Judi James கூறியுள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது. இரண்டு குடும்பங்களின் புகைப்படங்களை பார்க்கும் போது அனைவரும் மகிழ்ச்சியாக உள்ளனர்.

ஆனால் ஒரு மிகப்பெரிய வித்தியாசத்தை இந்த இரண்டு புகைப்படங்களில் பார்க்க முடிகிறது என்று கூறியுள்ளார்.

அதாவது மெகன் திருமண புகைப்படத்தில் மெர்க்கலின் அம்மா மிகவும் நெருக்கமாக மெர்க்கல் அருகில் நிற்கிறார், அதே போன்று ஹரியின் அப்பா சார்லஸ் ஹரியின் அருகில் நெருக்கமாக இருக்கிறார். ராணி எலிசெபத் மற்றும் பிலிப் முன்னால் சேரில் உள்ளனர்.

அதுவே யூஜின் திருமண புகைப்படத்தை பார்த்தால், யூஜினின் பெற்றோர் அதிக இடைவெளி விட்டு இருப்பதை போன்று தோன்றுகிறது.

அதுமட்டுமின்றி யூஜினின் சகோதரிக்கும் அவருக்குமிடையே அதிக இடைவெளி தெரிகிறது. அதுவே யூஜினின் கணவர் ஜாக்கை பார்க்கும் போது, அவரது அம்மா, அப்பா மற்றும் சகோதரர் நெருக்கமாக உள்ளனர் என்று கூறியுள்ளார்.

மேலும் ஒவ்வொரு புகைப்பட கலைஞர்களும் ஒவ்வொரு வித மாதிரியான ஸ்டைல்களில் புகைப்படம் எடுப்பர். அதனால் மெகன் மெர்க்கல் திருமணத்தின் போது, புகைப்படம் எடுத்து புகைப்பட கலைஞர் குறித்து எந்த ஒரு தகவலும் இல்லை, அதே சமயம் யூஜின் திருமணத்திற்கு Alex Bramall என்ற நபர் தான் புகைப்பட கலைஞராக இருந்துள்ளார்.

இது அவரின் ஸ்டைலாக கூட இருக்கலாம் என்று கூறப்படுகிறது. யூஜின் தன்னுடைய காதல் கணவனை திருமணம் செய்வதற்கு பல போராட்டங்களுக்கு பின்னர் தான் கரம் பிடித்தார். முதலில் இவர்களின் காதலுக்கு ராணி எலிசெபத் கடும் எதிர்ப்பு தெரிவித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

மேலும் பிரித்தானியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்