அவுஸ்திரேலிய சென்ற மெர்க்கலுக்கு காத்திருந்த பேரதிர்ச்சி! வியந்து பார்த்த ஹரி

Report Print Vijay Amburore in பிரித்தானியா
297Shares

அவுஸ்திரேலியாவிற்கு சுற்றுப்பயணம் மேற்கொண்ட இடத்தில் மெர்க்கலின் சிறிய வயது உருவத்தை போல இருந்த சிறுமியை பார்த்து இளவரசர் ஹரி வியந்துள்ளார்.

பிரித்தானிய இளவரசர் ஹரி தன்னுடைய காதல் மனைவி மெர்க்கலுடன் அவுஸ்திரேலியாவில் தற்போது சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ளார்.

இதற்கிடையில் மெர்க்கல் கர்ப்பமாக இருக்கிறார் என கெங்சிங்டன் அரண்மனை நிர்வாகம் அறிவிப்பை வெளியிட்டு அனைவைரையும் ஆச்சர்யத்தில் உறைய வைத்தது. இதனால் உலகின் நாலாப்பக்கத்தில் இருந்தும் இந்த தம்பதியினருக்கு பரிசுகள் வந்து குவிந்த வண்ணம் உள்ளன.

இந்த நிலையில் அவுஸ்திரேலிய சுற்றுலாவின் முதல் நாளில் பொதுமக்கள் பலரையும் தம்பதியினர் சந்தித்து வந்தனர். அப்போது ஹரியின் கண்கள், "பெண்களால் எதுவும் செய்ய முடியும்" என்ற எழுத்துக்கள் பொறிக்கப்பட்டிருந்த டி-சர்ட்டை அணிந்திருந்த சிறுமியை உற்றுநோக்கின.

அந்த சிறுமி மெர்க்கல் 11 வயதில் இருந்ததை போன்ற உருவத்தில் அப்படியே இருப்பதை பார்த்து ஆச்சர்யமடைந்துள்ளார். உடனே அந்த 9 வயதான சிறுமி Sethunya Gibbons-ஐ அழைத்த ஹரி, உன்னுடைய ஆடையில் இருப்பதை போல பெண்களால் எதையும் சாதிக்க முடியும் என கூறியுள்ளார்.

பின்னர் என்னுடைய மனைவியை சந்திக்கிறாயா? என அந்த சிறுமியிடம் கேட்டுள்ளார். அதற்கு சிறுமியும் சம்மதிக்க, மெர்க்கலை சந்திக்க வேண்டும் என்றால் எங்களுடன் புகைப்படம் எடுத்துக்கொள்ள வேண்டும் என கூறியுள்ளார்.

பின்னர் மெர்க்கல் வந்ததும் ஹரி, உன்னை போலவே சிறுமி இருக்கிறார் என கூற, மெர்க்கலும் ஆம் என கூறிவிட்டு போட்டோ எடுத்துள்ளனர்.

இந்த சம்பவம் குறித்து சிறுமியின் தாய் Rachelle கூறுகையில், மேகனை போல தானும் இருப்பதை நினைத்து என்னுடைய மகள் மிகுந்த உற்சாகத்தில் இருக்கிறாள் என தெரிவித்துள்ளார்.

மேலும் பிரித்தானியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்